பள்ளிக்கூடம் ஒன்றிற்கு மியூசிக் டீச்சராக வருகிறார் ஸ்ரேயா. ஆனால் மாணவர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பள்ளிலும் மற்ற பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். இதனால் ஸ்ரேயாவும், நாடக ஆசிரியரும் சேர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மியூசிக் ஸ்கூல் தொடங்குகின்றனர். அதில் மாணவ மாணவிகள் சேர்கின் றனர். அவர்களை வைத்து பிரபல ஆங்கில நாடகமொன்றை நடத்த முடிவு செய்கின்றனர். அதற்கு பல தடைகள் வருகிறது. தடைகளை தாண்டி ஸ்ரேயா திட்டமிட்டபடி அந்த நாடகத்தை எப்படி நடத்து கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
பள்ளி மாணவ மாணவிகளை இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் படி படி என்று வற்புறுத்துகின்றனர். இதனால் பிள்ளைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் விளையாட்டு , இசை போன்ற பொழுது போக்கில் ஈடுபடாததுதான். அந்த புத்துணர்ச்சியை ஸ்ரேயாவும் அவரது பார்ட்னர் ஷர்மா ஜோஷியும் தங்களது இசை பள்ளியில் தருகின்றனர்.
கலர்ஃபுல்லான மார்டன் காஸ்டடியூமில் ஸ்ரேயா மேற்கத்திய இசை டீச்சராக வந்து மனம் கவர்கிறார் உடன் நடிக்கும் ஷர்மாவும் மியூசிக் கற்க வரும் பிள்ளைகளுக்கு இசையுடன் நாடாகம் கற்பித்து பிரபல ஆங்கில நாடகத்தை அரங்கேற்ற எடுக்கும் முயற்சிகள் அதற்காக பெற்றோர் களிடம் சமாதானம் சொல்வது என பல வேலைகளை செய்து காட்சிகள் நகர உதவுகிறார்.
இசை பள்ளி பிள்ளைகளுடன் கோவா செல்லும் ஸ்ரேயா தங்கள் குழுவிலிருந்து ஒரு ஜோடி காதல் மயக்கத்தில் ஓட்டம் பிடித்ததும் அவர்களை காணாமல் திணறு வதும் விறுவிறுப்பு கூட்டு
கிறது. போலீஸ் உயர் அதிகாரி யாக கண்டிப்பு காட்டுகிறார் பிரகாஷ்ராஜ்
படத்தில் கண்ணுக்கு தெரியாத மாயாஜாலம் காட்டியிருக்கிறார் இளையராஜா. மெலடி கிங்கான இளையராஜா இப்படத்தில் ஹாலிவுட் தரத்துக்கு வெஸ்டர்ன் இசை அமைத்து மதிமயங்கிடச் செய்திருக்கிறார்.
அதேபோல் ஒளிப்பதிவாளர் கிரண் டேஹான்ஸ் பளிச்சென காட்சி களை படக்கியிருக்கிறார். அதற்கு இயற்கை மட்டுமல்ல படத்தின் வண்ணமயமான காஸ்டியுமும் கைகொடு த்திருக்கிறது
குழந்தைகளுக்கான படமாக மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கு படிப்பினை தரும் படமாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபாராவ் பய்யாலா.
மியூசிக் ஸ்கூல் – பெற்றோர்களை குழந்தைகள் அழைத்து சென்று காட்ட வேண்டிய படம்.