ஒதுக்குப்புறமான உத்ரவனம் கிராம பகுதியில் சிறுமிகள் நோய் பாதித்து சாகின்றனர். அந்த ஊரில் மனைவி பிள்ளை களுடன் தனிமையில் தங்கியிருக்கும் நபர்தான் செய்வினை செய்து சிறுமிகளை கொள்வதாக எண்ணி கோபப்படும் ஊர்மக்கள் கணவன், மனைவி இருவரையும் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்கின் றனர். 12 வருடம் கழித்து அந்த கிராமத்தில் உள்ளவர்களை தீய சக்தி பழிவாங்குவதாக கருதும் ஊர்மக்கள் அஷ்டதிக் பந்தனம் என்ற மந்திர கட்டுபோட்டு ஊர் எல்லையை தாண்டி யாரும் போகக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. ஆனால் காதலனை பார்க்கும் எண்ணத்தில் ஒரு பெண் ஊர் எல்லையைத் தாண்டி செல்கிறாள். இதனால் அஷ்டதிக்பந்தன கட்டு உடைந்து ஊருக்குள் தீய சக்தி நுழைந்து மக்களை பழிவாங்கத் தொடங்கு கிறது. ஒட்டுமொத்தமாக ஊரே அழியும் நிலை ஏற்படும்போது விரூபாக்ஷாவாக மக்கள் கண்களுக்கு தெரியும் ஹீரோ சூர்யா ( சாய் தரம் தேஜ்) அவர்களை எப்படி காப்பாற்று கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வெளியான சந்திரமுகி பட பாணியில் உருவாகியிருக்கும் படமே விரூபாக்ஷா.
டைட்டிலுக்கு முன்பே ரசிகர்களை ஒரு ஆட்டு ஆட்டிவிடுகிறார் இயக்குனர்.
இறந்த சிறுமியின் உடலை வைத்து மந்திரம் ஜெபிக்கும் மொட்டை மந்திரவாதியையம் அவரது மனைவியையும் ஊர் மக்கள் அடித்து இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்து எரிப்பது திகிலின் தொடக்கம்.
ஊர்பள்ளிக்கூடத்துக்கு இடம் வழங்க ஊருக்கு ஜீப்பில் வந்து கொண்டிருக்கும் சாய் தரம் வண்டி மீது திடீரென்று காகம் ஒன்று மோதி சாவது திடுக்கிட வைக் கிறது.
சாய் தரம் தேஜ், சம்யுக்தா காதல் சிலுமிஷங்கள் ரிலாக்ஸ் தரும் நிலையில் மீண்டும் ஊருக்குள் தீய சக்தி தனது பழிவாங்கும் ஆட்டத்தை தொடங்கியதும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பரபரப்பு மீண்டும் அரங்கை ஆக்ரமிக்கிறது.
ஒரு கட்டத்தில் சந்திரமுகிபோல் பேயாட்டம் போடத் தொடங்கும் சம்யுக்தா மிரள வைக்கிறார். வாத்தி படத்தில் டீச்சராக அமைதியாக நடித்த சம்யுக்தாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நடிப்பு தாண்டவம் ஆடியிருக்கிறார்.
பேய் பிடித்து மந்திர சக்தி ஏவி ஊர்மக்கள் எல்லோரையும் தீயில் தள்ளி எரிக்க முற்படும் சம்யுக் தாவை உயிரை பணயம் வைத்து எதிர்த்து போராடி மக்களை காக்கும் ஆபத்பாண்டவனாக வரும் சாய் தரம் தேஜ் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கொஞ்சம் ஏமாந்திருந் தாலும் சாய் தரமை நடிப்பில் தூக்கி சாப்பியிருப்பார் சம்யுக்தா.
பிவி எஸ் என்.பிரசாத், சுகுமார் தயாரித்திருக்கின்றனர்.
ஒட்டு மொத்த படத்துக்கும் உயிர் கொடுத்திருக்கிறது அஜனிஷ் லோக்னாத் இசை.
ஒளிப்பதிவாளர் ஷாம்தத் ஷைனுதீன் ரசிகர்களின் திகில் மூடை கடைசி வரை தக்க வைக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் வர்மா டண்டு காதலையும் பேயாட்டத்தையும் சமஅளவில் மிக்ஸ் செய்து மிரள விட்டிருக்கிறார். அதேசமயம்
சில லாஜிக் மீரல்களை மந்திர, தந்திர, எந்திரம் என புரியாத பெயர்களை சொல்லி சமாளிக் கவும் செய்திருக்கிறார்.
புரியாத சில சமஸ்கிருத வார்த்தை களை தவிர கே.பிரபாகரனின் எதார்த்த வசனம் வெற்றிக்கு கைகொடுக்கிறது
விருபாக்ஷா – ரசிகர்களுக்கு போடப்படும் அஷ்டதிக்பந்தனம்.