சூரசங்கு (விமல்) தன் தங்கையை மருத்துவ கல்லூரியில் சேர்க்கி றார். அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். தங்கை உடலை மருத்துவ கல்லூரிக்கே தானமாக வழங்குவதுடன் தினமும் தன் தங்கை உடலை வந்து பார்த்து விட்டு செல்கிறார் சூரசங்கு. இந்நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகள் சிலரை பண ஆசை காட்டி பெரும்புள்ளி களுக்கு விருந்தாக்குகிறார் கல்லூரி பேராசிரியை ஒருவர். பாதிக்கப்படும் பெண்களை சூரசங்கு காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அவரது நெருங்கிய தோழியும் சூழ்ச்சியில் சிக்கு கிறார். அவரை காப்பாற்ற முயலும் வீரசங்குக்கு தன் தங்கையை மானபங்கப்படுத்தி கொன்றது யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இதையடுத்து வீரசங்கு எடுத்த முடிவு என்ன என்பதை விறுவிறுப்புடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
கிராமத்து சென்டிமென்ட் காமெடி என மாறி மாறி நடித்து வந்த விமலுக்கு தங்கை பாச சென்டி மென்ட்டுடன் ஆக்ஷன் கலந்த கதையாக குலசாமி படம் அமைந் திருக்கிறது.
தங்கையின் உடலை அடிக்கடி மருத்துவ லேபுக்கு வந்து பார்த்து கலங்கும் விமல் அவரை கொன்றது யார் என்று தெரிய வரும்போது அவருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஷாக் l ஏற்படு கிறது. ஆனால் அதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும்.
ஆக்ஷன் காட்சியிலும் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார் விமல். துணிச்ச லான ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஹீரோயின் தான்யா ஹோப் நெடு நெடுவென வளர்ந்ததிருக்கிறார். அவரையும் ஆக்ஷன் களத்தில் இயக்குனர் இறக்கியிருக்களாம்.
டைட்டில் குலசாமி என்று இருப்ப தால் முழுக்க கிராமத்து பின்னணி யில் படமாக இருக்கும் என்று நினைத்தால் முழுக்க சிட்டி கதை யாக அமைத்து ஆச்சரியப்படுத்தி யிருக்கிறார்கள்.
படம் சீரிசாகவே செல்கிறது ரிலாக்சுக்கு கொஞ்சம் காமெடி பொடி தூவியிருக்கலாம்.
விஜய் சேதுபதி வசனம் என்றாலும் ஹைலைட் டாக ஒன்றுமில்லை. பட புரமோஷனுக்கு அவர் பெயர் பயன்பட்டிருக்கிறது.
ஏழை மாணவிகளின் பலஹீனத் தை சில பெரும்புள்ளிகள் எப்படி தவறாக பயன்படுத்திக் கொள்கி றார்கள் என்பதை துணிச்சலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷரவண ஷக்தி. கிளைமாக்சில் வரும் முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் கதாபாத்திரம் இறுதிக் காட்சியை அபாரமாக முடித்து வைக்கிறது.
வி.எம். மகாலிங்கம் இசை மீட்டரூக்குள் நிற்கிறது.
வைடு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
குலசாமி – பாலியல் குற்றவாளி களுக்கு என்கவுன்ட்டர் தீர்ப்பு.