Home / cinema / Cinema News / IN10 மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்க ஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ் (MovieVerse Studios) – தொடங்கப்படுவதை அறிவித்தது

IN10 மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்க ஸ்டூடியோ, மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ் (MovieVerse Studios) – தொடங்கப்படுவதை அறிவித்தது

IN10 மீடியா நெட்வொர்க் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட நடப்புச் சூழலுக்கான ஒரு முக்கிய திரைப்பட உள்ளடக்க ஸ்டூடியோ,   மூவீ வெர்ஸ் ஸ்டூடியோஸ்  (MovieVerse Studios)  – தொடங்கப்படுவதை அறிவித்தது

விவேக் கிருஷ்ணானி தலைமையிலான நெட்வொர்க்கின் திரைப்படப் பிரிவு ஸ்டுடியோவுக்கான இலட்சிணை  (லோகோ) மற்றும் வளர்ச்சிக்கான திட்டத்தை, வெளியிட்டது .

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு முன்னணி  நிறுவனமான IN10 மீடியா நெட்வொர்க், அதன் திரைப்படப் பிரிவான மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் உற்சாகமடைந்துள்ளது. இந்த ஃபிலிம் ஸ்டூடியோ திரையரங்குகளுக்கு வருகை தரும் பார்வையாளர்கள்   மற்றும்  ஸ்ட்ரீமிங் தளங்களின்    பார்வையாளர்களை தன்னோடு  இணைத்துக் கொள்ளும்  வகையில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் புதிய மற்றும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய உள்ளடக்கங்களோடு கூடிய திரைப்படங்களை தயாரித்து வழங்கும்.

IN10 மீடியா நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா பித்தி, அறிமுகம் குறித்த தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் போது கூறினார், “ஒரு புதிய மூவிவெர்ஸ் ஸ்டுடியோவை IN10 மீடியா நெட்வொர்க் குடும்பத்தில் கூடுதலாக அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட ரசிகர்களோடு ஒத்திசைந்து இயங்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பை  வெளிப்படுத்தும் ஒரு சாசனமாக இந்த ஸ்டுடியோ திகழ்கின்றது. தரமான உள்ளடக்கத்தைகொண்ட படைப்புக்களை வழங்கி பார்வையாளர்களுக்கும் எங்களுக்கும் இடையே   தற்போது நிலவி வரும் உறவை திரைப்படங்கள் மூலம் மேலும் வலுப்படுத்திக்கொள்வது   மற்றொரு புதுமையான வழியாகும்” .

மூவிவெர்ஸ் என்ற இதன் பெயர், மனதைக் கொள்ளை கொள்ளும் உள்ளடக்கங்களுடனான எங்கள் , எங்கள் படைப்புக்கள்  நினைவை விட்டு அகலாது நீண்ட நாள் தாக்கத்தை ஏற்ப்படுத்தி  சினிமாவின் பிரமாண்டமான ஒரு உலகத்தை அடையாளப்படுத்துகிறது.  ஸ்டுடியோவின் இலட்சிணை  ஈடு இணையற்ற பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கத்தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது. மற்றும் –மூவி தயாரிப்பின் மையமாக உள்ள லைட்ஸ் , கேமரா, ஆக்ஷன் !என்ற மூன்று வார்த்தைகளைக் காட்சிப்படுத்துகிறது.

 “மூவிவெர்ஸ் ஸ்டுடியோவில், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் புத்தம் புதிய உள்ளடக்கங்களை உருவாக்குவதில் எங்கள் கவனம் குவிந்துள்ளது மற்றும் கதைசொல்லல் மீதான எங்கள் அளவு கடந்த ஆர்வம் மற்றும் பார்வையாளர்களின் விருப்பங்களைப் பற்றி எங்களுக்குள்ள ஆழமான புரிதல் ஆகியவற்றால் அது உந்தப்படுகிறது. தொழில்துறையில் உள்ள சில தலைசிறந்த திறமைவாய்ந்த  படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து புதுமையான மற்றும் அழுத்தமான கதைகளுக்கு உயிரூட்ட எங்களை நாங்கள் அர்பணித்துக் கொண்டுள்ளோம். உங்களை மகிழ்விக்கவே  நாங்கள் இங்கே இருக்கிறோம், மட்டும் அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.” என்று மூவிவெர்ஸ் ஸ்டுடியோவின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக் கிருஷ்ணனி கூறினார்.

சில முன்னணி திறமையாளர்களுடன் இணைந்து உணர்வு பூர்வமான நாடகம்  மற்றும் நகைச்சுவை  தொடங்கி அதிரடி ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் வரையிலான உள்ளடக்கங்களோடு  பன்முக கலை வடிவங்களில்  திரைப்படங்களை உருவாக்கும் மாபெரும் லட்சியத்திட்டங்களை மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் கொண்டுள்ளது. வரவிருக்கும் பரபரப்பான திரைப்பட வரிசைகளில்  . பின்வருவன அடங்கும்:

·          ‘பட்லா ஹவுஸ்’, ‘தஸ்வி’ மற்றும் வரவிருக்கும் ‘தெஹ்ரான்’ போன்ற வெற்றிப் படங்களை சந்தீப் லெய்சல் மற்றும் ஷோப்னா யாதவ் நடிப்பில் உருவாக்கிய பேக் மை கேக் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து உருவாக்கிவரும், வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் நடைபெறும் ஒரு அதிரடி மீட்பு போராட்டத்தின்  மயிர்க்கூச்செறியும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம். அசுதோஷ் கோவாரிக்கருடன் பணிபுரிந்த மற்றும் ‘வென்டில்லேட்டர்’ மற்றும் ‘டியர் ஃபாதர்’ என்ற இரண்டு குஜராத்தி படங்களை இயக்கிய உமாங் வியாஸ் இயக்கத்தில் இது உருவாகிறது.

          ‘டேபிள் நம்பர் 21’, ‘ஆர்…ராஜ்குமார்’ மற்றும் ‘முன்னா மைக்கேல்’ ஆகிய திரைப்படங்களை வழங்கிய  ஃபெயித் பிலிம்ஸ் விக்கி ரஜனியுடன் இணைந்து  கூட்டாக தயாரிக்கப்படும் ஒரு த்ரில்லர் திரைப்படம் மற்றும் இப்படத்தை த்ரில்லர்கள்  மற்றும் திகில் திரைப்படங்களை உருவாக்குவதில் தலைசிறந்த நிபுணராக  வளர்ந்து வரும் பவன் கிருபாலானி இயக்குகிறார். ‘ராகினி எம்எம்எஸ்’, ‘ஃபோபியா’, ‘பூட் போலீஸ்’, போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள பவனிடம் இப்போது ‘கேஸ்லைட்’ அவரது சாதனை பட்டியல் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

DING எண்டர்டெயின்மெண்ட் உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஒரு அமானுஷ்யமான டிராமா. முற்றிலும் வித்தியாசமான ‘அசுர்: வெல்கம் டு யுவர் டார்க் சைட்’ நிகழ்ச்சியையும், ‘அபஹரன்’  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் தன்வீர் புக்வாலா, தயாரித்துள்ளார் மற்றும் சமீபத்தில்  அமேசான் மினி டிவி ‘தி ஹாண்டிங்’ நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார்.

· எலிப்சிஸ் என்டர்டெயின்மென்ட்டின் தனுஜ் கர்க் மற்றும் அதுல் கஸ்பேகர் இணைந்து தயாரித்த ஒரு அதிரடி திரில்லர் டிராமா. நவநாகரீக பொருட்களின் உள்ளடக்கங்களுக்குப் புகழ்பெற்ற  இந்த  நிறுவனம் ‘நீர்ஜா’, ‘தும்ஹாரி சுலு’ மற்றும் ‘லூப் லாபேடா’ போன்ற படங்களைத் தயாரித்து புகழ்பெற்றது

 கூடுதலாக, ‘மூன்றாம் பிறை’, ‘விசுவாசம்’ மற்றும் ‘மாறன்’ போன்ற பெரும் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களைத் தயாரித்தளித்த தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸின் டிஜி தியாகராஜனுடன் இணைந்து இரண்டு தமிழ் படங்களையும் ஸ்டுடியோ வெளியிடுகிறது.  பிரியதர்ஷன், செல்வராகவன் மற்றும் மோகன் ராஜா போன்ற பிரபல திரைப்பட உருவாக்குனர்களுடன்  இணைந்து பணியாற்றிய தமிழ் திரைப்பட இயக்குனர் பினு சுப்ரமணியம் இப்படங்களை இயக்குகிறார்.

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதிய மற்றும் மனதை ஈர்க்கக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை வழங்குவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட IN10 மீடியா, தற்போது, மூவிவெர்ஸ் ஸ்டுடியோவை அறிமுகப்படுத்தியதன் மூலம்,  இந்திய பொழுதுபோக்கு துறையில் தனது முன்னணி நிலையை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

மூவீவெர்ஸ் ஸ்டூடியோஸ் பற்றி

மூவீவெர்ஸ் ஸ்டூடியோஸ் என்பது திரையரங்குகள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்காக பார்வையாளர்களை மையப்படுத்திய நடப்புச் சூழலுக்கான உள்ளடக்கங்களைக் கொண்ட முக்கியமான திரைப்படங்களை,   உருவாக்கிவரும் ஒரு ஸ்டுடியோ ஆகும், மிகச்சிறந்த தலையாய தயாரிப்புக்களை உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்ட இந்த ஸ்டூடியோ பார்வையாளர்களுடன் ஒத்திசைந்து மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் உயிரோட்டமுள்ள  கதைகளை வழங்குவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூவிவெர்ஸ் ஸ்டுடியோஸ் என்பது IN10 மீடியா நெட்வொர்க்கின் ஒரு திரைப்படத் தயாரிப்புப் பிரிவாகும், இது பார்வையாளர்களின் விருப்பத்தேர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே  வேளையில் படைப்பாற்றலின் வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களின் எல்லைகளைத் விரிவடையச்செய்யும்  முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

IN10 மீடியா நெட்வொர்க் பற்றி

IN10 மீடியா நெட்வொர்க் என்பது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு வணிக நடவடிக்கைகளுக்கு ஆதாரமான  ஒரு தாய் நிறுவனமாகும். மற்றும் படைப்பாளிகளின் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிக்கொண்டதோடு  மிகச்சிறந்த உள்ளடக்கங்களோடான  நீண்டகால  தொடர்புகளுடன்-   எபிக், ஷோ பாக்ஸ், ஃபிலாம்சி,காப்பாரே, இஷாரா, எபிக்ஆன், டாக்குபே, மற்றும் ஜக்கர்நாட் ப்ரோடக்ஷன்ஸ் உட்பட – அனைத்துத் தளங்களிலும் வாழ்க்கை சுழற்சியின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிக்கொண்டிருக்கிறது. தொழில்முனைவோரான  ஆதித்யா பிட்டி தலைமையில், உலகத் தரம் வாய்ந்த பிராண்டுகளை உருவாக்குவதில் IN10 மீடியா நெட்வொர்க் தனது கவனத்தை செலுத்தி வருகிறது.

About Publisher

Check Also

The First Look of Vijay Antony’s ‘Hitler’ is out now!

First Look of Director Dhana’s ‘Hitler’ starring Vijay Antony in the lead role is launched!Chendur …