தலகரை கிராமத்தில் சாதி மாறி திருமணம் செய்தால் ஆண்களை அங்குள்ள சாதி வெறி பிடித்த பேய் கொன்று விடுகிறது. இளைஞன் சத்யராஜ் (மகேந்திரன்) தலகரை யில் உள்ள பெண்ணை காதலிக் கிறான். அங்கு சென்று பார்த்த பிறகுதான், தான் காதலிக்கும் பெண் சாதி வெறிபிடித்த பேயின் தங்கை என்று தெரிய வருகிறது. இதையறிந்த பேய் தன் தங்கையை காதலிக்கும் சத்ய ராஜை கொல்ல முயல்கிறது. காதலிப்பவர்களை பேய் ஏன் கொல்கிறது, சத்யராஜ் காதல் என்னவானது என்பதற்கு ரிப்பப்பரி காமெடியாக பதில் சொல்கிறது.
ரிப்பப்பரி ஒரு காதல் படமாக இருக்கும் என்று தியேட்டருக்குள் நுழைந்தால் ஜாலி, காமெடி, காதல் அத்துடன் ஒரு பேய் என கதம்ப விருந் தாக தொடக்கம் முதல் இறுதிவரை செல்கிறது.
தொடக்கத்திலேயே பேயின் ஆட்டமும் தொடங்கி விடுவதால் கதையில் ஆர்வம் அதிகமாகி விடுகிறது.
பேய்தான் ஆட்களை கொல்கிறது என்று தெரிந்ததும் அதை பிடிக்க மகேந்திரனும் அவரது நண்பர் களும் தலகரை கிராமத்துக்கு வந்த பிறகு காட்சிகள் தொடர் காமெடியாக வெடிக்கின்றன.
காதலி ஆர்த்தி பொடி வீட்டு கதவை மகேந்திரன் தட்டியதும் அங்கு பேய் வந்து கதவை திறக்க அதைக் கண்டு மகேந்திரன் நடுங்குவது குபீர் காமெடி.
மகேந்திரன் நண்பர்களாக வருபவர்களும் காமெடி செய்து கலகலக்க வைக்கின்றனர்.
புதிய திரைக்கதையுடன் நகர்கிறது படத்தின் 2ம் பாதி. பேய் வேடத்தில் நடித்திருக்கும் ஶ்ரீனி பேயாக வந்து பயமுறுத் துவதுடன் காமெடிக்கு துணை நிற்கிறார்.
கோவில் மரத்தடியில் அமர்ந்து அங்கு வருப வர்களுக்கு சாமியார் வாக்கு சொல்வதும் அவர் சொல்படி ஶ்ரீனி வாழ்வில் திடீர் ஆபத்து வந்ததும் சாமியார் நிறைய வித்தை காட்டு வார் என்று பார்த்தால் அவரோ டூபாங்கூர் சாமியாராகி மகேந்திரன் டீமுடன் சேர்த்து அரட்டை யடித்து வயிற்றை புண் ஆக்குகிறார்.
ஆர்த்தி பொடிக்கு அதிக வேலை யில்லை. மேலும் காவ்யா, அறிவு மணி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோரும் சிரிக்க சிரிக்க நடித்துள்ளனர்.
காமெடி சாமியார் தரும் நாய் குட்டி பொம்மை எப்படி பேய்யாட்டம் போடுகிறது என்பது தான் புரிய வில்லை.
நிறைய லாஜிக் மீறல்கள் இருந் தாலும் காமெடி தான் இயக்குனர் நா அருண் கார்த்தியின் நோக்கம் என்பதால் அத்துமீறலும் காமெடி லிஸ்டில் சேர்ந்து விடுகிறது.
ரிப்பப்பரி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள் அதற்கும் படத்தும் என்ன சம்பந்தம் என்றுதான் தெரியவில்லை.
ரத்தினம் ஒளிப்பதிவு, திவாரகா தியாகராஜன் இசை ஓகே ரகம்.
ரிபப்பரி – காமெடி பேய் கலாட்டா.
🤣🤣🤣 _ ⭐⭐⭐