அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தன்னையும் தாய் மற்றும் அக்கா வைவும் தவிக்க விட்டு மனைவி யுடன் தனது அண்ணன் ( கருணா கரன்) சென்ற பிறகு குடும்ப பாரத்தை சுமந்து நிற்கிறார் ஐஸ்வர்யா. திடீரென்று அவருக்கு நகைக்கடை அதிர்ஷ்ட குலுக்களில் 10 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுகிறது. அதைக்கேட்டு அகல்யா குடும்பம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அகலியாவின் அக்காவை மணக்க வரும் மாப்பிள்ளை காரை வரதட்ச ணையாக கேட்க அதை தர அகல்யா சம்மதிக்கிறார். இந்த சமயத்தில்தான் நகை வாங்கியது நான்தான் எனக்குத்தான் பரிசு காரை தரவேண்டும் என்று அகல்யா அண்ணன் குடும்பம் வந்து தகராறு செய்கிறது. விவகாரம் போலீஸ் வரை செல் கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதை காமெடியாக படம் விளக்குகிறது.
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்ட மணி பேசும் சொப்பன சுந்தரி என்ற காமெடியான வசனத்தை டைட்டிலாக படத்துக்கு வைத்திருக் கிறார் இயக்குனர்.
சொன்னபடி கதைக் களம் முழுக்க காமெடி களத்தில் நடந்துள்ளது. ஆனால் சொப்பன சுந்தரியைத் தான் காணோம்.
கார் பரிசு விழுந்திருப்பதாக ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொல்ல அதை நம்பாமல் நக்கலடிக்கும் ஐஸ்வர்யா, 5 ஆயிரம் ரூபா மதிப்பி லான மிக்சிதானே பரிசு என்று தீபா சங்கரும் கடனை அடைக்க ரூட்போடுவது சிரிப்போ சிரிப்பு.
கருணாகரன் காரை சொந்தம் கொண்டாடி வந்து ஐஸ்வர்யா ராஜேஷிடம் தகராறு செய்யத் தொடங்கியதும் விவகாரம் போலீஸ் நிலையம் செல்ல அது பெரிதாக ஊதிப் பெரிதுபடுத்து வதும், ஒரு பக்கம் போலீஸ் அட்டாக், மறுபக்கம் மைம் கோபி, கருணாகரன் தொல்லை என அடுத்தடுத்து ஐஸ்வர்யா குடும்பம் கஷ்டத்தில் தத்தளிப்பதும் என க்யூ கட்டி வரும் பிரச்னைகள் படத்தை காமெடியும் சுவராஸ்யமுமாக கொண்டு செல்கிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சுனில் ரெட்டி ஐஸ்வர்யா ராஜேஷை அடைய நினைத்து செய்யும் தந்திரங்களும் அதை தெரிந்துகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் அவரை சிக்க வைக்க போடும் நாடகத்தில் சஸ்பென்ஸ் ஒர்க்கவுட் ஆகிறது
போலீஸ் நிலையத்திலிருந்து காரை எடுத்துவர டூப்ளிகேட் ஓனராக நடிக்கும் ரெடின் கிங்ஸ்லி உஷாராக பேசி எஸ்ஸானாலும் கடைசி கட்டத்தில் சிக்கி பளார் அறைவாங்கி பம்முவது கலகல. காமெடியில் ரொம்பவே கலகலக்க வைப்பது தீபா சங்கர் தான். அப்பாவித்தனமாக பேசி வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவ்வப்போது செய்யும் ஓவர் ஆக்டிங்கை குறைத்துக்கொள்வது நல்லது. அது காமெடி செய்யும்போது செயற்கைத்தனத்தை காட்டிக் கொடுக்கிறது.
கருணாகரன் காமெடி செய்வதா வில்லத்தனம் செய்வதா என்று புரியாமல் திணறுகிறார்.
சொப்பன சுந்தரி கார் என்று கரகாட்டக்காரன் காமெடியை கதைக்கு கனெக்ட் செய்ததுதான் ஏனென்று புரியவில்லை. அட்லீஸ்ட் ஐஸ்வர்யா பெயரையாவது சொப்பன சுந்தரி என்று வைத்தி ருக்கலாம்.
லைகா சுபாஷ்கரன் படத்தை தயாரித்திருக்கிறார். படப்பிடிப்பு தயாரிப்பு ஹெட்டாக தமிழ்க் குமரன் நிர்வகித்திருக்கிறார்.
அஜ்மல் தஷீன் இசை மனதில் நிற்கவில்லை. பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஓ கே.
சொப்பன சுந்தரி – சிரித்துவிட்டு வரலாம்.
⭐⭐⭐