Home / cinema / Cinema News / கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

கீழடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் இன்று பார்வையிட்டனர்.

கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட அருங்காட்சியகம் ஒன்று உருவாக்கப்பட்டது. உலகதரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் பார்வையாளர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் இந்த அருங்காட்சியகத்தை தமிழ் மொழிக்கு இலக்கிய சேவையை இடையறாது செய்து வரும் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, திருமதி ஜோதிகா சூர்யா, அவர்களின் வாரிசுகளான தேவ் மற்றும் தியா ஆகியோர்களும் பார்வையிட்டனர்.
இவர்களுடன் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசனும் உடனிருந்தார். இறுதியில் அங்குள்ள பதிவேட்டில் சிவக்குமார் குடும்பத்தினர் தங்களது எண்ணங்களை குறிப்பிட்டனர்.

About Publisher

Check Also

Thalapathy69 announcement!

KVN Productions is thrilled to officially announce its upcoming project, Thalapathy-69 as its first Tamil …