Home / cinema / Cinema News / ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ படக் குழு

இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம்,

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

சிறந்த ஆடை வடிவமைப்பு
(ஏகா லக்கானி) ,

ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா ,
திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், திரு. ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்

About Publisher

Check Also

பிரமாண்ட நட்சத்திர திருமணம்: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் DMY கிரியேஷன் மகனின் திருமண வரவேற்பு!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி …