கிராமத்து ஒதுக்குப் புறத்தில் வீடு கட்டி மனைவி ஈஸ்வரிராவ், மகள் வரலட்சுமியுடன் வாழ்கிறார் சார்லி. ஏழ்மையிலும் கடனிலும் குடும்பம் தள்ளாடுகிறது. அப்போது வரும் சந்தோஷ் பிரதாப், காட்டு வழி பாதையாக இருப்ப தால் இரவு வீட்டில் தங்கிவிட்டு செல்ல சார்லியிடம் அனுமதி கேட்கிறார் பிரதாப். அவரும் சம்மதிக்கிறார். இதற்கிடையில் கடன்காரர் வீட்டுக்கு வந்து சத்தம் போடுகிறார். அதை பார்க்கும் சந்தோஷ் தன்னிடம் இருக்கும் நகை பணத்தை வரலட்சுமியிடம் காட்டி இதுபோல் நீங்களும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறார். ஆனால் வரலட்சுமி வேறுவிதமாக யோசிக்கிறார். பிரதாப்பை கொன்று விட்டு பணம், நகையை கொள்ளையடிக்க தன் குடும்பத் துக்கு ஐடியா தருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் எதிர்பாராத பதில் அளக்கிறது.
ஒரு வீடு , ஒரு பெட்டிக் கடை , ஒரு சாராய கடை கொஞ்சம் நடிகர்கள் இவர்களுக்குள்ளேயே முழு கதையும் சுழல்கிறது.
சார்லியின் மகளாக வரலட்சுமி சரத் நடித்தி ருக்கிறார். மனைவி யாக ஈஸ்வரிராவ் நடித்துள்ளார். வீட்டுக்கு வந்து குறி சொல்லும் குடுகுடுப்பைகாரரை வரலட்சுமி திட்டி விரடியக்க அடுத்த நிமிடம் குடுகுடுப்பைக்காரர் சொன்னபடி பணத்துடன் சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டுக்கு வந்ததும் கதை வேகமாக நகரத் தொடங்குகிறது.
சந்தோஷ் பிரதாப் அழகில் மயங்கும் வரலட்சுமி அவருடன் கனவில் ஒரு டூயட்டும் பாடிவிடுகி றார். வரலட்சுமி காதல் டூயட் பாடி ரொம்ப நாளாச்சு.
சந்தோஷ் பிரதாபை கொள்வதற்கு சார்லி குடும்பம் வரலட்சுமி யுடன் சேர்ந்து போடும் திட்டம் தொடங்கி யதும் காட்சிகள் திக் திக்கென நகர்கிறது.
கிளைமாக்சில் அந்த உண்மையும் , சஸ்பென்சும் தெரிய வரும்போது அரங்கே அதிர்ச்சியில் கப்சிப் ஆகிவிடுகிறது.
சந்தோஷ் பிரதாபப் பாசிடிவ்வான திங்கிங் என்கிற அளவுக்கு பக்குவ மான நடிப்பை வெளியிட்டிருக் கிறார்.
வரலட்சுமியின் உருட்டும் விழிகள் வில்லத்தனத்தை வெளிப்படுத் துகிறது. அம்மாவிடம் சண்டை பிடிப்பது, பிரதாப் மீது காதல்n கொள்வது என வித்தியாசமான பாத்திரத்தில் வெளுத்திருக்கிறார் வரலட்சுமி.
சார்லி ஈஸ்வரிராவ் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர்.
கன்னட படவுலகில் வெற்றி பட இயக்குனராக வலம் வரும் தயாள் பத்மநாபன் ஒரு தமிழர். அவர் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் கொன்றால் பாவம்.
ஒரு சின்ன குடும்பத்தில் ஆசையால் நடக்கும் விபரீதம் என்பதை படம் கூறுகிறது.
பல்லி விழும் பலன் பார்ப்பது அதனால் ஒரு விபரீதம் நடக்கிறது என்ற சென்டிமென்ட் மூடநம்பிக் கைக்கு உரம்போடுவது போல் உள்ளது.
சாம் சி எஸ் பின்னணி இசை , பாடலிசை என அசத்தியுள்ளார்.
⭐⭐⭐