நடிப்பு: ஜூனியர் எம் ஜி ஆர், ஐஸ்வர்யா தத்தா, சாஜி சவுத்ரி, சென்றாயன், ரக்ஷிதா, அஸ்வினி, மணிமாறன், சம்பத்ராம், கயல் தேவராஜ்
தயாரிப்பு : தமிழ்பாலா ஆர்.வினோத்குமார்
இசை: ஶ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு: லெனின் பாலாஜி
இயக்கம்: கீரா
பி ஆர் ஓ: சதீஷ் (AIM)
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் குடும்பத்திலிருந்து அவரது மனைவி ஜானகி வழி பேரன் ஜூனியர் எம் ஜி ஆர் நடித்தி ருக்கும் படம் இரும்பன்.
எம் ஜி ஆர் என்றால் குறவர் களுக்கு உயிர். அந்த இனத்தை சேர்ந்த கதாபாத்திரத்தில் ஜூனியர் எம் ஜி ஆர் நடித்தி ருப்பது ஏகப் பொருத்தம்.
வசனம் பேசுவதும் சண்டை காட்சியில் நடிப்பதும் எம் ஜி ஆர் பாணியையே கையாண்டிருப்பது புத்திசாலித்தனம்.” இங்கு ஏழைக்கும் பணக்காரனுக்கும்தான் சண்டை” என்று பேசும் வசனத்தில் அர்த்த முள்ளது.
ஒளிவிளக்கு படத்தில் இடம் பெறும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதாங்க பாடலுக்கு ஜூனியர் எம் ஜி ஆர், ஐஸ்வர்யா தத்தா போடும் ஆட்டமும் அதற்கு ரீமிக்ஸ் இசையை வேகம் தெறிக்க அமைத் திருக்கும் ஶ்ரீகாந்த் தேவாவும் ரசிகர்களை ஆட வைக்கின்றனர்.
கடலில் சிக்கிக் கொள்ளும் ஜூனியர் எம் ஜி ஆர், யோகிபாபு, ஐஸ்வர்யா தத்தா சென்றாயன் போன்ற வர்கள் அலை கடலின் கஷ்டங்ககளை நன்றாக வே அனுபவித்திருக்கின்றனர்.
அந்தமான் பகுதி காட்டு எபிசோட் அழகாக படமாக்கப் பட்டுள்ளது.
ஐஸ்வர்யா தத்தா சேட்டு பெண் ணாகவே மாறியிருக்கிறார். சில காட்சி களில் குட்டை உடை அணிந்து கிளுகிளுப்பு ஏற்று கிறார்.
யோகிபாபு கிளைமாக்ஸ் வரை காமெடி பஞ்ச் விளாசுகிறார்.
சாஜி சவுத்ரி, சென்றாயன், ரக்ஷிதா, அஸ்வினி, மணிமாறன், சம்பத்ராம், கயல் தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழ்பாலா ஆர்.வினோத்குமார் தயாரித்திருக்கின்றனர்.
லெனின் பாலாஜி ஒளிப்பதிவு கடல் மற்றும் அந்தமான் அழகை அள்ளி தெளித்திருக்கிறது.
பி ஆண்டு சி சென்டரின் நாடித்துடிப்பு தெரிந்து இயக்கியிருக்கிறார் கீரா.
Openmictamil -⭐⭐