Breaking News
Home / Uncategorized / Agilan Movie Review

Agilan Movie Review

துறைமுகத்தில் பரந்தாமன் (ஹரிஸ் பெராடி) சொல்வதுதான் வேதம். அவர் சொல்லும் சட்ட விரோத செயல்கள் செய்யும் அடியாளாக இருக்கிறான் அகிலன்( ஜெயம் ரவி). ஒரு சமயம் துறைமுகத்தில் சிக்கி கொள்ளும் பயங்கரவாதியை அங்கிருந்து தப்பிக்க வைக்க அகிலனை அணுகுகிறது ஒரு டீம். அதை யேற்று செக்யூரிட்டி, ஸ்கேனர் எல்லாவற்றின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு தப்ப வைக்கிறான். இதனால் பத்மனாபன் கோபத்துக்கு ஆளாகிறான் அகிலன். இந்நிலையில் சொந்தமாக கப்பல் வாங்கி அதில் ஏழைகளுக்கு தேவையான உணவு கொண்டு சென்று அளிக்க எண்ணுகிறான். அகிலன். இந்த திட்டத்தை முறியடிக்க பத்மனாபன் ஒருபக்கமும்,  போலீஸ் அதிகாரி ஒருபக்கமும், ரவுடி கூட்டம் ஒருபக்கமும் என மும்முனை தாக்குதல் நடத்தி அகிலனை தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறது. அதன்பிறகு நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் ரத்த்ம் சூடுபறக்க பதில் அளிக்கிறது.

இதுவரை இல்லாத ஒரு வித்தியாச மான அகிலன் என்று பாத்திரத்தில் கட்டுமஸ்தான தோற்றத்துடன் வந்து கடுமையான உழைப்பையும், கனமான நடிப்பையும் வழங்கியி ருக்கிறார் ஜெயம் ரவி.

புல்லட் வண்டியில் அமர்ந்து கொண்டு பனியனும், ஜீன்சுமாக துறைமுகத்தை வலம் வரும்போது கம்பீரத்திலும், கலக்கலான ஆக்ஷனிலும் மிரளவிட்டிருக்கும் ஜெயம் ரவி. சிவப்பு சட்டை போட்டாததுதான் ஒரு குறை, ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக அனல் பறக்க விடுகிறார்.

கிரேனில் கண்டெய்னரை தூக்கி அடுக்கும் காட்சியானாலும், ரவுடி களை அலறவிடும ஆக்ஷன் காட்சியிலும் ரசிகர்களை மட்டுமல்ல இளவட்டங்களையும் நரம்பு புடைக்க செய்கிறார் ஜெயம் ரவி. .பிரியா பவானி சங்கருடன் கொஞ்சுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் முழுக்க அகிலன் பாத்திரத்தில் துறை முகத்தை கட்டி ஆண்டிருக்கிறார்.

என்ஜினீயராக மற்றொரு ஸ்பெஷல் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அது ஒரு சஸ்பென்ஸ் பாத்திரம்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒருபுறமும் தாயாக இன்னொரு புறமும் நடித்திருக்கிறார் தான்யா.

ஜெயம் ரவி கேரக்டர் இப்படி அடிதடியாகவே போய்க்கொண்  டிருக்கிறதே என்று பார்த்தால் இறுதி கட்டத்தில் தமிழன்னை கப்பல் வாங்கி அதன் மூலம் உலகெங்கும் உள்ள ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து ஜெயம் ரவி மேற்கொள்ளும் சம்பவங்கள் அவரது நெகடிவ் கேரக்டருக்கு பரிகார தீர்வாக உள்ளது. டிரெய்லரில்  தெ பையா, ஓ பையா என்று பேசிய கடுமையான வசனங்கள் படத்தில் இல்லாதது ஆறுதல்.

இயக்குனர் மறைந்த எஸ் பி. ஜனநாதன் நினைவாக மதுசூதன் நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு எஸ்பி ஜனநாதன் என்று பெயர் சூட்டி கவுரவப்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.

சாம் சி எஸ் இசை படத்துக்கு பெரும்பலம். துரோகம் பண்ணு பாடல் கேட்க கரடுமுரடாக இருந்தாலும் பல உண்மைகள் அதில் பொதிந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோசம் துறைமுகத்தை அகண்ட கடற்பரப்பில் எத்தனை கோணங் களில் காட்ட முடிமோ அத்தனை கோணத்திலும் காட்டி ஆச்சரியப் பட வைக்கிறார்.

இயக்குனர் என்.கல்யாண் கிருஷ்ணன் பாசிசத்துக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்படும் வெங்காய கப்பல் முதல் மற்ற பொருட்களின் மூலம் விலைவாசி எப்படி செயற்கையாக உயர்த்தப்படுகிறது என்பதை சம்மட்டி அடி வசனத்ததால் உடைத்துக்காட்டியிருக்கிறார். இயக்குனர்.

கிளைமாக்சில் ஜெயம் ரவியை துப்பாக்கியால் போலீஸ் இருமுறை சுட்ட பிறகும் அவர் கையில் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து நிற்பது சினிமாத்தனம்.

அகிலன் – தரம், திறன் உழைப்பில் தாறுமாறு.

About Publisher

Check Also

ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

ஃபேண்டஸி ரொமாண்டிக் காமெடி படத்தில் நடிக்கும் நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா …