Breaking News
Home / cinema / Cinema News / சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்*.

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்*.

*கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.டி.இமான் இசையமைக்க ராஜேஷ்,வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் முன்பே வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் “உருட்டு” “உருட்டு” பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டரில் சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன்,அயோத்திதாச பண்டிதர், பாரதிதாசன், பட்டுகோட்டை அழகிரி, ஜீவா, ராமமூர்த்தி, காயிதேமில்லத் போன்ற பல்வேறு தலைவர்களின் படங்களை வைத்து வெளியிடபட்ட பாஸ்ட் லுக் போஸ்டரில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். அதற்கு அடுத்து வெளி வந்த ஸ்னீக்பீக் தொடக்கத்தில் “இந்த படத்தில் வரும் காட்சிகள் சம்பவங்கள் அனைத்துமே நிஜம். இங்கு நடந்ததைதான் சொல்லியிருக்கிறோம்.யார் மணமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பு கிடையாது” என தொடங்கி மாடே மாடே என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் போரட்டங்களை நக்கல் செய்யும் காட்சி இடம் பெற்று இருந்தது.அதற்கு அடுத்து வெளியான ஸ்னீக்பீக்ல் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித்தருவது போலவும், ‘கட்சி பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் ஒரு sneak பீக் வீடியோ வெளியாகி அரசியல் கட்சிகளில் சீட் கொடுக்கும் முறையை கிண்டல் செய்து இருந்தது.மற்றொரு Sneak peak வீடியோவில் திருக்குறள் எழுதுனது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி இருந்தது. இது இன்றைய அரசியல் கட்சிக்குள் இருக்கும் தொண்டர்களின் நிலையை காட்டுவது போல் அமைந்து இருந்தது. சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்,sneak peak மூலம் அரசியலை விமர்சித்து வரும் பப்ளிக் படம். என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேச போகிறது என்கிற விவாதத்திற்கு இடையில் தற்போது பப்ளிக் படத்தின் முதல் பாடலான “உருட்டு”,”உருட்டு” வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.யுகபாரதி எழுதயுள்ள இந்த பாடல் அனைத்து அரசியல் கட்சிகளை பாரபட்சம் இல்லாமல் விமர்சனம் செய்து உள்ளது. இதில் உள்ள சில வரிகள் இன்றைய அரசியல் சூழ்நிலையை நேரிடையாக தாக்குவது போல் உள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “சுகமா கால நக்கி பொழப்பாய்ங்க” என அதிமுகவை நேரடியாக தாக்குவது போல் உள்ள வரிகளும். “மகனை சி.எம் ஆக்க துடிப்பாய்க” என திமுகவை தாக்குவது போல் வரிகளும், “மதத்தை முன்ன வச்சு மக்களையும் சிதைச்சு,நாட்டை பங்கு பிரிப்பாங்க” என பாஜகவை நேரிடையாக விமர்சிக்கும் வரிகள் பலராலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதேபோல் பாடலின் இறுதியில் மோடி டிவியில் பேசிக் கொண்டிருக்க பெரியார் அண்ணாதுரை காந்தி சேகுவேரா கலைஞர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சி அரசியல் தலைவர்களை அவமரியாதை செய்வது போன்று உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இப்பாடல் குறித்து இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள பலரும் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்து இருப்பதால் படத்தில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்றும், விரைவில் இந்த பாடல் தடை செய்யப்படலாம். என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எதாவது ஒரு கட்சி விமர்சனம் செய்து இருந்த தப்பிக்கலாம். அனைத்து கட்சியையும் விமர்சனம் செய்து உள்ளதால் உருட்டு உருட்டு பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

About Publisher

Check Also

Devi Sri Prasad Announces Highly Anticipated India Tour on World Music Day

Devi Sri Prasad (DSP), the renowned Music Director in the Indian Film Industry, has announced …