Home / cinema / Movie Review / Naan Kadavul Illai Review

Naan Kadavul Illai Review

தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஆலமரமாக விளங்கி வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவரது இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை.

வீச்சருவாள் வீரப்பனான சரவணன் ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என உறுதியாக இருக்க ஜெயிலில் இருந்து வந்த சரவணன் நீதிபதி வழக்கறிஞர் உள்ளிட்டவர்களை கொன்று விட்டு சமுத்திரகனியை பழிவாங்க துடிக்கிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரகனியின் மகளை கடத்தி விடுகிறார்.

மறுபக்கம் எஸ்ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். யார் கடிதத்தின் மூலம் என்ன கேட்டாலும் அதை சந்திரசேகர் நிறைவேற்றி வரும் நிலையில் சமுத்திரகனியின் மகன் சரவணன் தன்னுடைய அப்பாவை கொலை துடிக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என லெட்டர் எழுதுகிறான். இதனால் அடுத்து நடந்தது என்ன? சமுத்திரகனி 2 சரவணனுக்கும் இடையேயான யுத்தத்தில் வென்றது யார்? இந்த பிரச்சனையை எஸ் ஏ சந்திரசேகர் தீர்த்தாரா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தில் சி.ஐ.டி அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரகனி. மனைவி, மகளை காப்பாற்ற முயற்சிப்பது, சரவணனை பிடிக்க ஆர்வம் காட்டுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் இனியா, குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார். சமுத்திரகனிக்கு உதவியாளராக வரும் சாக்‌ஷி அகர்வால் கவர்ச்சியிலும், ஆக்‌ஷனிலும் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து பாராட்டை பெற்றிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சரவணன், தன்னை கொடூரமானவனாக நிரூபிக்க போராடி இருக்கிறார். ஒரு சில இடங்களில் தன்னுடைய கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கிறார். தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கியும் இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். சமுத்திரகனியின் தாயாக வருபவர் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ஒன் லைன் கதையை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். உதவி தேவைப்படும் போது உதவுபவர்களே உண்மையான கடவுள் என்பதை சொல்லியிருக்கிறார். நல்ல போலீஸ்காரர்களுக்கு ஏற்ற படமாக உருவாக்கியதற்கு பெரிய பாராட்டுக்கள். விஜய்யின் போஸ்டர்கள், விஜய் பேசிய வசனங்கள் படத்தில் ஆங்காங்கே வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார். மகேஷ் கே தேவ்-வின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘நான் கடவுள் இல்லை’விறுவிறுப்பு.

Rating : ⭐⭐⭐

Image

About Publisher

Check Also

Chella Kutty Movie Review: A Sweet Throwback to 90s Romance

Casting:Dr. Ditto, Magesh, Deepshika, Simran, Chaams, Madhumitha, Thidiyan, Chaplin Sundar, Mani, Lakshmi, Pushpatha Directed By: …