பெண்கள் கல்வி குறித்து பேசும் ‘அயலி’ – அதுமட்டும் இல்லை இந்த படம் பெண்களுக்கான மாதவிடாய் பற்றியும் சொல்லும் வெப் சீரியஸ்
எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் டைரக்ஷனில் உருவாகியிருக்கும் தொடர் ‘அயலி’. இதுலே அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி லிங்கா உள்ளிட்டோர் நடிச்சிருக்காய்ங்க. மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இத்தொடர் வருகிற 26 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.
பருவமெய்தியவுடன் பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கிராமம், இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால் கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்ற நம்பிக்கை, இவற்றை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய போராடும் இளம் சிறுமி என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ரேவாவின் இசையில் அயலி இன்னும் கம்பீரம் காட்டுகிறாள். அங்கங்கு ஒலிக்கும் பாடல்களும் ரசனை. சிறிய பின்னணிகள் கொண்ட நிலப்பரப்பை கூட மிக அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர். கணேஷின் எடிட்டிங்கும் திரைக்கதைக்கு உதவியுள்ளது
ஒரே இடம் ஒரே பிரச்சனை அதற்கான ஒரே தீர்வு என ஒரு சிறிய வட்டம் தான் கதையும் திரைக்கதையும் என்பதால் கூறியது கூறல் போன்ற தொனி சீரிஸ் பார்க்கும் போது ஏற்படுகிறது. இருந்தாலும் கனமான கதைகளம் என்பதால் அதனை இயல்பாக நாம் மறந்துவிடுகிறோம்
Zee5 OTT வெளியிடும் இத்தொடரை பெருமையாக பேர் சொல்லும்படி தயாரித்துள்ளார் எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் புரொடக்ஷன் கம்பெனி நிறுவனர் குஷ்மாவதி. ஒரு தயாரிப்பாளராக அவரின் கதைத் தேர்வு சல்யூட் அடிக்க வைக்கிறது
ஒவ்வொரு எபிசோட்களிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் வசனங்கள்🗨. மிக அருமையாக அமைந்துள்ளது. சரியான கருத்துக்கு சரியான எழுத்தும் வாய்த்திருப்பதால் அயலி அசரடிக்கிறாள்.
அடூர் கோபாலகிருஷ்ணன், பாலுமகேந்திரா போன்றோர் கையாண்ட இந்த மாதிரி வாழ்வியல் கதையை சிறிய திரையில் சொல்ல முயற்சித்து அழுத்தமான வசனங்களால் அழகாக இயக்கிய இந்த குழுவினரை பாராட்டலாம்.
இயக்குனரின் மிக பெரிய பலம்💪 என்றால் அது ராம்ஜி ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளர் ரேவா பெண் இசையமைப்பாளர் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி நம்மை வியக்க வைக்கிறார்.
மொத்தத்தில் அயலி நம்மை ரசிக்க வைக்கிறார் வியக்க வைக்கிறார் சிந்திக்க வைக்கிறார்.
Openmictamil Rating : 🌟🌟🌟