Home / cinema / Cinema News / 4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !!

4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !!

4 ஆண்டு இடைவெளிக்கு பின் திரைக்கு வரும் ஷாரூக் கானின் பதான்!! பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் !!

பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் பதான் .

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கிங் கான்’ ‘பாலிவுட்டின் ராஜா’ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக் கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .

ஏற்கனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

About Publisher

Check Also

Om Sivam – An Unusual Love Story Produced in Three Languages!

Om Sivam – An Unusual Love Story Produced in Three Languages! Om Sivam – A …