சென்னை, ஜனவரி 13,2023: சென்னை, பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் பார்வையாளர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல சமீபத்தில் தமிழக நாட்டுப்புற கலைகளை போற்றி கவுரவிக்கும் விதமாக ‘கிராமிய திருவிழா’ நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான ‘கிட்ஸ் பேஷன் பீஸ்டா’ நிகழ்ச்சி நடைபெற்றது. இது பார்வையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் இந்திய மற்றும் மேற்கத்திய உடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.
சூப்பர் மாடல்களாக தங்கள் குழந்தைகள் மேடையில் நடந்து வருவதை பார்த்த அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல் அவர்களின் ஆடை வடிவமைப்பாளர்கள் தான் இன்னும் இந்நிகழ்ச்சியை சுவாரசியமாக்கினார்கள். இதில் பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் சிறப்பு பரிசுகளும், பரிசு கூப்பன்களும் வழங்கப்பட்டன.
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பற்ற: பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், சில்லறை வர்த்தகம் சார்ந்த மால்களை துவக்கி சொத்துக்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மால்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ள பீனிக்ஸ் மால்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து பிராண்ட் நிறுவனங்களும், சாப்பிடுவதற்கான ஓட்டல்களும், பொழுது போக்குவதற்கான தியேட்டர்களும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மும்பை, புனே, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பீனிக்ஸ் மால்கள் உள்ளன.