Home / cinema / Cinema News / தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தில் திலீப்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘குபீர்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பாடலாசிரியர் அகிலன் கங்காதரன் பாடல்கள் எழுத, பின்னணி பாடகர்களான அந்தோணி தாசன், பென்னி தயாள், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, எம் சி பாஸீ ஆகியோர் பாடல்களை பாடி இருக்கிறார்கள். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர்கள் சின்னையன் மற்றும் வெங்கடேஷ் பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” திரைப்படப் படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தனது கனவை தொடர்ந்து துரத்தும் ஒரு எளிய மனிதனின் உண்மை கதை தான் ‘தில் திலீப்’. நகைச்சுவையாகவும், உத்வேகம் அளிக்கும் வகையிலும் யதார்த்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.” என்றார்.

About Publisher

Check Also

பிரமாண்ட நட்சத்திர திருமணம்: கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் DMY கிரியேஷன் மகனின் திருமண வரவேற்பு!

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி …