Home / Uncategorized / V3 Movie Review

V3 Movie Review

வி 3 – திரைப்பட விமர்சனம் 0BY ADMIN ON JANUARY 6, 2023 ·REVIEWS 3 total views, 3 views todayதிரைப்படங்கள் என்பது பொழுதை போக்க மட்டுமல்ல. நல்ல கருத்துக்களைச் சொல்லி சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் சில இயக்குநர்கள் படமெடுப்பார்கள். அந்த வகையைச் சேர்ந்தவர் வி3 படத்தை இயக்கிய அமுதவாணன்.பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்தால் மட்டும் போதுமா… அவ்வகைக் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தனது பார்வையில் சொல்லியிருக்கிறார் அமுதவாணன்.பத்திரிகை முகவராகப் பணியாற்றும் ஆடுகளம் நரேனுக்கு இரண்டு பெண்கள்.தேர்வு எழுதச் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பி வருகிறாள் மூத்த மகள்.வழியில் அவரது இரு சக்கர வாகனம் நின்றுவிட ரிப்பேரை சரி செய்ய உதவுவதுபோல் நடிக்கும் ஐந்து காமுகர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறாள் அந்தப் பெண்.முகமே தெரியாத அளவுக்கு தீயிட்டு கொழுத்தப்பட்ட அவளது பிரேதம் மட்டுமே போலீசாருக்குக் கிடைக்கிறது.குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் ஐந்து அப்பாவி இளைஞர்களை அவசர அவசரமாக காவல்துறை கைது செய்து, அதைவிட அவசரமாக அவர்களை என்கவுண்டரும் செய்துவிடுகிறது.கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தார் நீதி கேட்டு போராட அப்போது ஏற்படும் கலவீச்சில் அவர்கள் காயமடைகின்றனர்.இது குறித்து விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணைய உயரதிகாரி வரலட்சுமி சரத்குமார் விசாரணை நடித்துகிறார். விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிப்படுகின்றன.வரலட்சுமி சரத்குமாரின் கம்பீரமான நடிப்பும், அவரது உடல் மொழியும் ஏற்ற பாத்திரத்துக்கு வலு சேர்க்கின்றன.பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பாவணா, அவரது தங்கையாக நடித்திருக்கும் எஸ்தர் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.மகளைக் காணாமல் தவிக்கும் தந்தை வேடத்தில் ஆடுகளம் நரேன் பிரகாசிக்கிறார்.பிற்பகுதியில் வரும் எதிர்பாரத திருப்பங்கள் படத்தின் விறுவிறுப்பை அதிகப்படுத்துகின்றன.இரவுக் காட்சிகளையும் சரியான ஒளியமைப்பில் படமாக்கிய சிவா பிரபுவின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது.விசாரணை நடக்கும்போது சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லும் காட்சிகளை தவிர்த்திருக்கலாமே.. குறிப்பாக வரலட்சுமி என்ன நடந்தது என எஸ்தரிடம் கேட்க, அவர் சொன்னதையே திரும்பவும் சொல்லும் காட்சியை சொல்லலாம்.அரசாங்கம் இந்த பிரச்னைக்கு உடனடியாகாகத் தீர்வு காண்பிப்பதாககாட்டிக்ககொள்ளும் முதலமைச்சர், விடிவதற்குள் குற்றவாளிகளை தன் அரசுதண்டித்துவிட்டது என்று பகிரங்கமாக ஊடகத்தில் பேசி போலீசாரின் என்கவுண்டர்நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்து முட்டு கொடுப்பாரா என்ன?அதேபோல் பாலியல் பலாத்காரத்துக்கு தீர்வு விபச்சாரத்தை சட்டபூர்வமாக அரசாங்கம் அங்கீகரம் செய்ய வேண்டும் என்ற கருத்தை இயக்குநர் வலியுறுத்துவதை ஏற்க முடியாது.நல்ல கருத்தை சொல்ல முற்பட்டு உரத்த சிந்தனையைத் தூண்டியிருக்கும் வி3 திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் ஐயமில்லை.மதிப்பெண் 3.5 5

About Publisher

Check Also

Vimanam Review

Vimanam is a Telugu-Tamil bilingual movie featuring Samuthirakani, Anasuya Bharadwaj, and Rahul Ramakrishna in lead …