Home / cinema / Cinema News / இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது ! Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  

தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார். சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். தொழில்நுட்ப குழு விவரம் எழுத்து இயக்கம் – மாரி செல்வராஜ்ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் இசை – சந்தோஷ் நாராயணன்கலை இயக்கம் – குமார் கங்கப்பன்படத்தொகுப்பு  – சூரிய பிரதமான்சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன் நடனம் – சாண்டி பாடல்கள் – யுகபாரதி, வெயில் முத்து உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா ஒலி வடிவமைப்பு – சுரேன் Gஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்உடைகள் – ரவி தேவராஜ் மேக்கப் – R கணபதிவிளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வெங்கட் ஆறுமுகம்தயாரிப்பாளர் – திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்

About Publisher

Check Also

Icon Cine Creations LLP Presents ‘Mayal’: A Socially Impactful Film by APG Azhumalai Featuring ‘Myna’ Fame Sethu

Icon Cine Creations LLP proudly presents ‘Mayal,’ a thought-provoking film directed by APG Azhumalai, starring …