Wednesday , February 12 2025

செம்பி இசை வெளியீட்டு விழா !!!

Trident Arts R ரவீந்திரன் மற்றும் ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் அஜ்மல் கான், ரெயா தயாரிப்பில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஷ்வின்குமார் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “செம்பி”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்ம பூஷன் உலகநாயகன் கமல்ஹாசன் தலைமையில், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலகலமாக நடைபெற்றது

இவ்விழாவினில்..

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

பிரபு சாலமன் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். எங்கு இப்படியான இடங்களை பிடிக்கிறார் என ஆச்சர்யமாக இருக்கிறது. கோவை சரளா நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கமல் சார் ஒரு பட விழாவிற்கு வந்தால் அந்தப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

நடிகை கோவை சரளா பேசியதாவது…

இந்தப்படத்தின் ஹீரோ பிரபு சாலமன் சார் தான். அவர் படத்தில் நடிப்பது ஈஸி. அவர் சொல்வதை கேட்டு அதை செய்தால் மட்டும் போதும், பிரமாதமாக வந்துவிடும். இங்கு வந்து வாழ்த்திய அனைத்து பெருமக்களுக்கும் என் நன்றிகள்.

தயாரிப்பாளர் TG தியாகராஜன்…

இசை விழா நாயகன் நிவாஸ் K பிரசன்னாவிற்கு வாழ்த்துகள். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். அவரது கும்கி படம் பார்த்து அவருடன் வேலை செய்ய வேண்டுமென கேட்டு படம் செய்தோம். இந்தப்படத்தை மிக அற்புதமாக எடுத்திருக்கிறார். கோவை சரளா மிக நன்றாக நடித்திருக்கிறார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் அம்மா T சிவா பேசியதாவது….

கமல் சார் ஒரு படத்திற்கு வந்தால் அது வெற்றிக்கான அறிகுறி. விக்ரம் மூலம் திரைத்துறையையே மீண்டும் ஜொலிக்க வைத்துள்ளார். பிரபு சாலமன் மிக அற்புதமான இயக்குநர். கோவை சரளா மிகச்சிறந்த நடிகை. மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை பிடிக்கும் தகுதி கோவை சரளாவுக்கே உண்டு. பிரபு சாலமன் செய்த அற்புதங்களில் ஒன்று தம்பி ராமையா போன்ற நடிகரை தமிழுக்கு கொடுத்தது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

திரு அருள்பதி பேசியதாவது…

விக்ரம் படத்திற்காக கமலுக்கு வாழ்த்துகள். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது…

கமல் சார் இன்னும் எல்லோரையும் இன்ஸ்ஃபையர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். கமல் சார் போன்ற ஆளுமை கிடைத்தது சினிமாவுக்கு பெருமை. மிகக்குறைந்த பட்ஜெட்டில் மைனா, கும்கி என எடுத்து பிரமிக்க வைக்கிறார் பிரபு சாலமன். வெறும் பறவை பறக்கும் இயற்கையை தான் காட்டுகிறார், தியேட்டர் அதிர்கிறது. அதே போல் கோவை சரளா அவர்கள் பிரமிக்க வைக்கும் நடிப்பை தந்துள்ளார். படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

கமல் சாருக்கு என்னைவிட தீவிரமான ரசிகன் இருக்க முடியாது. அவரை வைத்து சிங்காரவேலன் படமெடுத்தேன், இன்றும் கொண்டாடும் படமாக இருக்கிறது. அதற்கு காரணம் கமல் சார் தான். அவர் ஒவ்வொரு காட்சியிலும் சின்ன சின்ன நகாசு வேலைகள் செய்து அசத்திவிடுவார். அஷ்வின் அவர்களே கமல் சாரை பார்த்து நடிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குநர்களே இருக்கிறார்கள், அதில் முக்கியமானவர் பிரபு சாலமன். மனோரமா ஆச்சிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப கூடியவர் கோவை சரளா தான். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.

திரு நாஞ்சில் சம்பத் பேசியதாவது..

இந்தப்படம் ஒரு இயற்கை நாட்டியம், இந்தப்படத்தில் எதிர்க்கட்சிக்காரனாக ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றார் பிரபு சாலமன், அதுவே தான் எனது விருப்பமும். நான் நன்றாக நடித்ததாக கோவை சரளா சொன்னார். அவரை வாழும் மனோரமா என்றார்கள். அவர் ஆளும் மனோரமா. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

திரு பழ கருப்பையா பேசியதாவது…

ஒரு நாள் போன் செய்து இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நடிக்க வையுங்கள் நான் நடிக்கிறேன் என்றேன். ஒரு காட்சிக்கு ஒரே வசனத்தை பல வடிவங்களில் சொல்லி நடிக்க வைப்பார். அது சரியான வடிவம் பெறும் வரை விட மாட்டார். மிகச்சிறந்த இயக்குநர். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

கே.பாக்யராஜ் பேசியதாவது…

கமல் விழாவுக்கு வந்தால் படம் ஜெயிக்கும் என்று இங்கு சொன்னார்கள். அந்த ராசி எனக்கும் இருக்கு அவர் நடித்த 16 வயதினிலே தான் எனக்கும் ஆரம்பம். அந்தப்படத்தில் அவரது திறமையை பிரமித்து பார்த்திருக்கிறேன். அதே போல் கோவை சரளா அவர்களை எட்டு வயதிலிருந்தே எனக்கு தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் என்னிடம் அடம்பிடித்து நடித்தார். அவரை மனோரமா போல் என்றார்கள் அது உண்மையான கருத்து. இந்தப்படத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பிரபு சாலமன் மிகச…

About Publisher

Check Also

Nilavukku Enmel Ennadi Kobam Audio Launch witnesses a young set of talented debutants

Actor Dhanush is all set to release his third directorial venture, Nilavukku En Mel Ennadi …