Home / cinema / Cinema News / KONDRAAL PAAVAM

KONDRAAL PAAVAM

EINFACH ஸ்டுடியோஸ், பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் தயாரிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் நடிக்கும் “கொன்றால் பாவம்” படத்தின் பூஜை இன்று (28.10.22) காலை சென்னையில் உள்ள வடபழனி பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு நவம்பர் 1-ஆம் தேதி ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.

1981-களில் நடக்கும் க்ளாஸிக் க்ரைம் த்ரில்லர் கதையான இந்த திரைப்படம், மோகன் ஹப்பு எழுதிய பிரபல கன்னட நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.

கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குநர் தயாள் பத்மனாபன், இந்தக் கதையை முதலில் கன்னடத்தில் இயக்கினார். கன்னடத்தில் இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கநர் மற்றும் சிறந்த துனை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. பிறகு, பிரபல தயாரிப்பாளாரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அதை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்க உள்ளார். விழுப்புரத்தில் பிறந்த தமிழரான தயாள் பத்மநாபன், கன்னடத்தில் 18 திரைப்படங்களையும், தெலுங்கில் 1 திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் அவர் கன்னட மொழியில் 8 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

வரலக்‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் ப்ரதாப் இருவரும் படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், TSR ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

தயாரிப்பு: EINFACH ஸ்டுடியோஸ்- ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார்.
இணைத்தயாரிப்பு: தயாள் பத்மநாபன், டி பிக்சர்ஸ்.
கதை, திரைக்கதை, இயக்கம்: தயாள் பத்மநாபன்.
வசனம்: தயாள் பத்மநாபன் மற்றும் ஜான் மகேந்திரன்.
மூலக்கதை: மோகன் ஹப்பு.
இசை: சாம் C.S.
ஒளிப்பதிவு: செழியன் R.
எடிட்டர்: ப்ரீத்தி பாபு.
கலை இயக்குநர்: விதல் கோசனம்.
பாடல் வரிகள்: பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன்.
நடன இயக்குநர்: லீலா குமார்.
ஒலிக்கலவை: உதயகுமார்.
நிர்வாகத் தயாரிப்பாளர்: வினோத்குமார்.
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D’One.
ஒப்பனை: சண்முகம்.
உடை: சக்ரி.
ஆடை வடிவமைப்பாளர்: மீரா சித்திரப்பாவை.
விளம்பர வடிவமைப்பு: நவீன் குமார்.

About Publisher

Check Also

The First Look of Vijay Antony’s ‘Hitler’ is out now!

First Look of Director Dhana’s ‘Hitler’ starring Vijay Antony in the lead role is launched!Chendur …