Home / Sports / Super 10 League

Super 10 League

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள்,  சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும்,  சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு,  இந்திய முன்னணி  நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது!!

இந்திய முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இந்தியன் கிரிக்கெட் லெஜண்ட் கிறிஸ் கெய்ல் இணைந்து, ‘சூப்பர் 10’ என்ற தனித்துவமான கிரிக்கெட் போட்டியின் முதல் பதிப்பை அறிவித்தனர்.  இந்த போட்டியில்  இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து  10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இந்த குறுகிய ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த பொழுதுபோக்கை தருமென்பது உறுதி. இப்போட்டிகள் டிசம்பர் 2022 இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும்.

இந்த லீக் போட்டிகளில் தமிழ், பாலிவுட், கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர்.
இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் கூறுகையில்.., “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்.

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில்…,
 “சூப்பர் டி10 லீக்  கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்.

இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட்டின் நிறுவனர் மற்றும் இயக்குனரான தினேஷ் குமார் கூறுகையில்.., “நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை  வழங்க உறுதிபூண்டுள்ளோம். கிரிக்கெட் மீது உலகளாவிய  அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில்  கொண்டுவரவுள்ளோம். பங்கேற்கவுள்ள பல பிரபலங்களை அறிவிப்பது மகிழ்ச்சி. உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை  வழங்க ஆவலாக உள்ளோம்.

சூப்பர் 10 கிரிக்கெட்டின் இயக்குநர் சஞ்சய் விஜய் ராகவன் கூறுகையில்..,
“கிரிக்கெட் வீரர்களும் பிரபலங்களும் ஒன்றிணைவதைக் காணும் சூப்பர் டென் லீக்கை ஏற்பாடு செய்வதில் நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம். போட்டிகள் எப்போது தொடங்குமென மிக ஆவலாக உள்ளது. இந்தப் போட்டியில் சுதீப் கிச்சா மற்றும் கிறிஸ் கெய்ல் போன்ற ஆளுமைகள் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. பெரும் ஆளுமைகள் பங்கேற்பது  ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கும். இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரியர்கள் எதிர்பார்க்கும் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு போட்டியாக  இதை உருவாக்க உத்தேசித்துள்ளோம்.

முதன்மை ஸ்பான்சரான காஷாவின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான குமார் கௌரவ் கூறுகையில்,  “இப்போட்டிக்கு நிதியுதவி வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி. இது ஒரு அற்புதமான பொழுதுபோக்கு போட்டி. இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டாக இருக்கும். இந்த விளையாட்டு போட்டியில் எங்கள் காஷா என்ற பிராண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி.

மேலும் இது குறித்தான தகவல்களை அறிந்துகொள்ள இணைந்திருங்கள் www.supertencricket.com

மேலதிக தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்
 ITW Playworx PR Office Tanmaya Vyas – Tanmaya@itwplayworx.com 
+91 9619872899

About Publisher

Check Also

Indian Racing League and FIA-Certified Formula 4 Indian Championship: India’s First Night Street Race

Chennai, July 29, 2024 – The Indian Racing Festival (IRF) is set to make history …