திருநங்கைகள் முப்பெரும் விழா முதல் நாள் நிகழ்வு இலயோலா கலூரியில் நடைபெற்றது.
திருநங்கைகள் கல்வி மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அமர்வு நடைபெற்றது. வரவேற்பு நடனம் மற்றும் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது. சகோதரன் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் முனைவர் சுனில் மேனன் அவர்களின் வாழ்த்துரையை தொடர்ந்து, தலைமை வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமுர்த்தி அவர்கள் திருங்கையருக்கான சட்ட உரிமைகள் குறித்து விபரமாக விளக்கினார். லாயொலா கல்லூரியின் டைரக்டர், ஸ்கூல் ஆஃப் ஹுமன் எக்சலன்ஸ் அருட்தந்தை. டாக்டர். ஜோசப் அண்டனி ஜேக்கப் மற்றும் அருட்தந்தை ஜஸ்டின் பிரபு அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் திரு சரண் அவர்கள் தலைமையில் திருநங்கையரின் தற்போதைய வேலைவாய்ப்பு சூழல் குறித்து குழு அமர்வு நடைபெற்றது. அதில் நாட்டின் முதல் வாகன ஓட்டுனர் திருநங்கை. வைஷ்ணவி, உணவு தொழில் செய்யும் மோகனபிரபா, மனித வள அலுவலர். சுஜாதா, ரோட்டரி சங்கத்தை சார்ந்த திரு தன்ராஜ், திருநங்கையர் ஆராய்ச்சியாளர் சர்மிளா விஜயகுமார், சுய உதவிக்குழுக்கள் ஒருங்கிணைப்பாளர் – புவனேஷ்வரி கலந்து கொண்டு திருநங்கைகளின் உரிமைகள், வேலை சூழல், அரசில் பதிவு செய்யும் முறை, சுய உதவிகுழுக்களின் பங்கு, வேலை வாய்ப்பில் இருக்கும் முன்னேற்றங்களை குறித்து விரிவாக விளக்கினர்.
தொடர்ந்து பள்ளிக்கல்விஅமைச்சர் கல்லூரி வந்தடைந்தார்.
திருநங்கைகளின் வரவேற்பு நடனத்துடன் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர். திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன், திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் ஆதி லட்சுமி, டாக்டர் சுனில் மேனன், சரிதா யாதவ் – தேசிய திட்ட அலுவலர், யுனஸ்கோ,பங்கு பெற்ற கூட்டம் நடைபெற்றது.
யுனஸ்கோ நிறுவனத்தின் மூலம், சகோதரன் அமைப்பினரால் நடத்தப்பட்ட, பள்ளி சூழலில் திருநங்கைளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்த ஆய்வு விபரங்கள் ஒலி ஒளி வடிவில் அமைச்சர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி சூழலில் ஏற்பட்ட வன்கொடுமைகள் குறித்து பல செய்திகள் பகிரப்பட்டது. ஆய்வில் கல்வியின் அவசியம் முன் வைக்கப்பட்டது.
டாக்டர். சுனில் மேனன் தொடர்ந்து Be a buddy, not a buly என்ற ஆய்வுப்புத்தகத்தின் உள்ளடக்கங்களை விளக்கினார். 60% மாறியப்பாலின மாணவர்கள் கேலிக்கும், 40% மாணவர்கள் பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் வன்கொடுமைகளை சந்தித்துள்ளனர். இது எங்குமே அறிவிக்கப்படவில்லை. 52% – 56% மாணவர்கள் பள்ளி இடைவிலகலுக்கு உள்ளாகிறார்கள். எனவே கல்வி பாடத்திட்டங்களில் மாறுபட்ட பாலின அடையாளங்கள் குறித்து படிப்பிக்கப்படவேண்டும். வன்கொடுமைக்கு எதிரான கொள்கைகள் கல்வி சூழலில் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் வன்கொடுமைகளை குறித்து புகார் தெரிவிக்கும் வசதிகள் ஏற்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். ஒட்டுமொத்த வன்கொடுமை ஒழிப்பு குறித்த செயல்பாடுகளில் பெற்றோரும் ஈடுபடுத்தப்படவேண்டும்.
யுனஸ்கோ அமைப்பின் சரிதா ஜாதவ் அவர்கள், யுனஸ்கோ அமைப்பு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதால், கல்வி நிறுவனங்களில் நிகழும் வன்கொடுமைக்குறித்த இந்த ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மாணவர்கள் மத்தியில் அனைத்து வகை வன் கொடுமைகளும் நிச்சயம் ஒழிக்கப்படவேண்டும் என்றார்.
லாயலாவின் முதல்வர் அருட்தந்தை, லாயோலா கல்லூரி திருநங்கைகள்/திருநம்பிகள் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக கூறினார்
இதுவரை செய்தி தொடர்பு, கம்பியூட்டர் மற்றும் சமூகப்பணி போன்ற சிறப்பு பாடங்களில் 7 திருநங்கை மாணவிகள் படிப்பை தொடர்கின்றனர். 2க்கும் மேற்ப்பட்ட திருநங்கைகள் முனைவர் படிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தொடர்ந்து திண்டுக்கல் லியோனி, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பின் அவசியத்தை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் உரையாற்றினார்.
தொடர்ந்து அமைச்சர் அவர்கள் அனைவரையும் மனிதம் சார்ந்த அணுகுமுறையில் ஆதரவளிக்க வேண்டும். இந்த நிகழ்வில் பெருமையுடன் பங்கு கொள்வதாக தெரிவித்தார். தன்னுடைய தாயாருக்கு சுகாதாரப்பராமரிப்பையும் ஒரு திருநங்கை பராமரிப்பாளர் மிக அன்பாக கவனித்துகொள்வதாக தெரிவித்தார். திருநங்கைகளுக்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் கலைஞர் அவர்கள் எற்படுத்தினார் என குறிப்பிட்டார். திருநங்கைகள்தனது சொந்த நாட்டில் அகதிகளாக வாழும் நிலை நிச்சயமாக மாற்றப்படும் என்றார். திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கலைஞர் அவர்கள் வழியில், தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என தெரிவித்தார். யுனஸ்கோ ஆய்வின் அனைத்து கருத்துக்களும் வரும் அரசு அலுவல் கூட்டங்களில் ஆழமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
