படத்தில் கட்டிட தொழிலாளியாக பச்சை முத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் நடிக்கிறார். அவருடைய மனைவியாக துளசி என்ற கதாபாத்திரத்தில் ரித்விகா நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் குழந்தை ரித்விகா இன்னொரு பக்கம் இவர்கள் இருவருக்கும் துணையாக சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த இனியா இருக்கிறார். திடீரென்று ஒரு நாள் இனியா காணாமல் போகிறார். பின் அவருடைய சடலம் தான் மருத்துவமனைக்கு வெளியில் கிடக்கிறது.
இதேபோல் பச்சை முத்துவின் மனைவியையும் காணாமல் போகிறார். இதை அடுத்து பச்சை முத்து போலீசில் புகார் கொடுக்கிறார். அப்போது விசாரிக்கும் போது ஒரு அதிர்ச்சியான தகவல் விசாரிக்கும் கிடைக்கிறது. ஆனால், பச்சை முத்து அதை ஏற்க மறுகிறார். பின் மச்சைமுத்து தன்னுடைய மனைவி எங்கே என்று தேடுகிறார். இறுதியில் பச்சைமுத்துவின் மனைவி என்ன ஆனார்? பச்சைமுத்துவிற்கு வந்த தகவல் என்ன? இனியாவின் கொலைக்கு காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.
பணத்திற்கும் அதிகாரத்திற்கும் இடையில் சாதாரண மனிதனின் நீதி எப்படி இருக்கிறது என்பதை படத்தில் அழகாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். கார்ப்பரேட் கம்பெனிகளின் தந்திரத்தால் சாதாரண மனிதர்களின் உயிர்கள் கம்பெனிகளின் அலட்சியமாக விளையாட்டு கருவியாக தான் இருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறார். கிரைம், தில்லர் கதையை இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் மக்களுக்கும் புரியும் வகையில் இயக்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பலமாக இருக்கிறது. படத்தில் கட்டிட தொழிலாளியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கருணாஸ் வெளிப்படுத்தி இருக்கிறார். கிழிந்த பனியன், அழுக்கு லுங்கி இருக்கிறார். அவருக்கே உரிய பரிதாபத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மனைவி, குழந்தையை நினைத்து கருணாஸ் அழுந்து தள்ளும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக வந்திருக்கிறது. வழக்கம் போல் இல்லாமல் இந்த முறை கருணாஸ் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம்.
இவரை அடுத்து ரித்விகா தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அதிகாரத்தை எப்படி எல்லாம் வலைக்கலாம் என்ற கதாபாத்திரத்தில் உமா ரியாஸ், பாகுபலி பிரபாகர் ஆகியோர் உமா படத்தில் உள்ள பிற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமும், வேகமும் இருந்திருந்தால் ‘ஆதார்’ இன்னும் அதிகமாக கவனம் பெற்றிருக்கும்.
Openmictamil Rating