30 வருடத்துக்கு முன் அனாதை விடுதியில் இருக்கும் எல்லா குழந்தைகளும் பலரால் தத்தெடுக் கப்படுகின்றனர். அந்த குழந்தை களை 3 வருடம் கழித்து ஒரு கூட்டம் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கிறது. இதை தடுக்க முயன்ற போலீஸ் அதிகாரி அருண்பாண் டியன் பின்னர் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார். அவரது மகன் அதர்வா மறைமுகமாக போலீ ஸுக்கு உதவும் பணியில் சேர்கிறார் அப்போது தான்யா நடத்தும் அனாதை இல்லத்தி லிருந்து குழந்தைகளை வில்லன் கூட்டம் திட்டமிட்டு கடத்துகிறது. அதை தடுக்க அதர்வா போராடுகிறார அவர் எப்படி குழந்தைகளை காப்பாற்றுகிறார். கடத்தல் கூட்ட தலைவனை எப்படி அழிக்கிறார் என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.
படம் முழுக்க அதர்வாவின் ஆக்ஷன் அதிரடி கொடிகட்டி பறக்கிறது. காக்கிசட்டைபோடாத போலீஸாக ஸ்பை வேலைகளை தனது டீமை வைத்து சரியாக காய் நகர்த்தி வில்லனின் அடியாட் களை துவம்சம் செய்கிறார்.
குழந்தைகளை கடத்த வில்லன் கூட்டம் நடத்தும் நகர்வுகளை கண் காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து முறியடிப்பதும், போலீஸை திசை திருப்பிவிட்டு சிமென்ட் கலவை கலக்கும் டிரக்கில் குழந்தைகள் கடத்தப்படு வதை கண்டுபிடித்து காரில் துரத்தும் அதர்வா சேசிங் காட்சி களில் பரபரக்க வைக்கிறார்.
ஞாபக மறதி தந்தை அருண் பாண்டியனுக்கு “உங்களுக்குள் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் அவனுக்கு ஞாபகமறதி இருக்காது. வில்லன் கூட்டத்தினர் நம் குடும்பத்தினரை அழிக்க வந்தால் அவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நம்பிக்கையூட்டும் அதர்வா மனதில் பதிகிறார்.
தான்யாவுக்கு அதிக வேலையில்லை.
வயசுகாலத்தில் செய்யாத ஸ்டன்ட் காட்சியை இந்த வயதில் செய்தி ருக்கிறார் சின்னி ஜெயந்த்.
முனிஸ்காந்த், அறந்தாங்கி நிஷாவை இன்னமும் காமெடிக்கு பயன்படுத்தியிருக்கலாம்.
வில்லன் ராகுல் தேவ் ஷெட்டி ஆஜானபாகு தோற்றத்திலேயே பயமுறுத்துகிறார். சீதா, அழகம்பெருமாள் என படத்தில் நிறைய கிளைப்பாத்திரங்கள் வருகின்றன.
தயாரிப்பாளர்கள் பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பா தாராள பொருட் செலவில் பிரமாண்டம் காட்டியிருக் கின்றனர்.
இயக்குனர் ஷாம் ஆண்டன் கதையில் சஸ்பென்ஸ் கட்டிகாக்க வேண்டும் என்பதற்காக படத்தின் முதல் பாதி வரை எதை நோக்கி கதை நகர்கிறது என்பதை யூகிக்க முடியாமல் நகர்த்திச் செல்கிறார். திரைக்கதையில் சற்று குழப்பி னாலும் ஆக்ஷன் காட்சிகளை வைத்து ஈடுசெய்திருக்கிறார் இயக்குனர்.
ஜிப்ரான் இசை அரங்கை அதிர வைக்கிறது.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு ஆக்ஷன் மூடை விலகாமல் கடைசிவரை மெயின் டெயின் செய்கிறது.
எடிட்டிங் விறுவிறு வென்று படத்தை கொண்டு செல்கிறது. ஒரு சில காட்சிகளை வெட்டி இணைக்கும் பணியை இடம் மாற்றியிருந்தால் இன்னும் பலம் கூடியிருக்கும்.
ட்ரிக்கர்- புல்லட் வேகத்தில் சுழன்று ஒன்மேன் ஆர்மியாகியி ருக்கிறார் அதர்வா.
Openmictamil Rating Out Of 5