மும்பை சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்கும் அரவிந்த்சாமி பெரிய தாதா. மோதல் ஒன்றில் இவர் பழைய நினைவுகளை இழந்துவிட அவர் கொண்டு சென்ற ரூ 30 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகிறது. அவருக்கு பழைய நினைவை வரவழைத்து தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவர குஞ்சக்கோ போபனை ஒரு கூட்டம் ரூ 25 லடசம் சன்மானம் பேசி அனுப்பி வைக்கிறது. குஞ்சக்கோ போபன் அரவிந்த்சாமியிடம் நட்பாக பழகி தங்கம் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முயல்கிறார். முன்பு சண்டை நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அந்த இடத்துக்கு சென்றதும் அரவிந்த் சாமி குஞ்சக்கோ போபனை சுற்றி வளைத்து தங்கம் பதுக்கிய இடத்தை சொல்லும்படி துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். குஞ்சக்கோ அதிர்ச்சி அடைகிறார். தன்னை அரவிந்த்சாமி மிரட்டுவது ஏன் என்று புரியாமல் திகைக் கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் அதிரடி யாக பதிலளிக்கிறது.
ரெண்டகம் என்றால் என்ன? என்று குழப்பம் வரும். “உண்ட வீட்டுக்கு ரெண்டகம் “என்ற பழமொழியை கேட்டால் ரெண்டகம் என்பது துரோகம் என்று பொருள் விளங்கும்
அண்டர்கரன்ட் ஆக்ஷன் கதை களுக்கு எப்போதுமே அடுத்து என்ன நடக்குமோ என்ற விறுவிறுப்பு இருக்கும் . அந்த விறுவிறுப்பு இதிலும் படம் தொடங்கிய சில நிமிடங்களி லேயே ஆரம்பமாகி விடுகிறது.
பாப்கார்ன் விற்கும் அரவிந்த்சாமி ஒரு முன்னாள் தாதா என்று முதலிலேயே சொல்லப்படுவதால் தாவூத் என்ற அவரது கதாபாத் திரம் முழுகவனத்தையும் ஈர்த்துக்கொள்கிறது.
அரவிந்த்சாமியிடம் நட்பாக பழகி அவரை கூலிப்படை கூட்டம் சொன்னபடி குஞ்சக்கோ போபன் காரில் மங்களூர் அழைத்துச் செல்லும்போது எப்போது வேண்டுமானாலும் என்னவும் நடக்கலாம் என்ற பதற்றம் நிமிர வைக்கிறது.
வழியில் ஒரு ஓட்டலில் மது குடிக்கும் அரவிந்த்சாமி அங்கு குஞ்சக்கோவை தாக்கும் ரவுடி களை அதிரடியாக வீழ்த்தி அசரவைக்கி றார்.
ஸ்டைலாக மோதும் அரவிந்தசாமி யின் ஸ்டன்ட் காட்சி அவர் அக்ஷனில் தேறிவிட்ரார் என்பதை நிரூபிக்கிறது.
குஞ்சக்கோ போபன் ஆக்ஷன் காட்சிகளில் தடுமாறுவதுபோல் காட்டி கிளைமாக்ஸில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடும்போது சபாஷ்போட வைக்கி றார்.
அரவிந்த்சாமியை குஞ்சக்கோ கடத்தி செல்கிறார் என்று நினைத் தால் அரவிந்த்சாமிதான் குஞ்சக் கோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறார் என்ற விவரம் தெரியும்போது எதிர்பாராத ஷாக் பரவுகிறது.
சில சஸ்பென்ஸ்களை இங்கு உடைக்காமலிருந்தால்தான் படம் பார்க்கும்போது அந்த ஃபீல் கிடைக்கும்.
குஞ்சக்கோவின் காதலி ஈஷா ரெப்பா சிக் உடைகளில் கிக் ஏற்றுகிறார். மற்றொரு தாதாவாக வருகிறார் ஜாக்கி ஷெராப்.
ஆர்யா, ஷாஜி நடேசன் தயாரித்திருக்கின்றனர்.
அருள்ராஜ் கென்னடி, ஏ.எச்.காஷிஃப்கா, கைலாஸ் மேனன் இசை காட்சிகளை தூக்கி நிறுத்துகிறது.
கவுதம் சங்கர் ஒளிப்பதிவு பளபளக்கிறது
இயக்குனர் ஃபெல்லினி டி.பி படத்தை ஆச்சர்ய டுவிஸ்ட்களுடன் இயக்கியுள்ளார். இது 2ம் பாகம் படம். முதல் பாகம் மற்றும் 3 ம் பாகம் படம் இரண்டும் இணைந்து அடுத்து உருவாக உள்ளதாம்.
ரெண்டகம்- ஆக்ஷன் பிரியர்களுக்கு அல்வாத் துண்டு.
OPENMICTAMIL RATING OUT OF 5