அழகும் , பசுமையும் நிறைந்த கிராமத்தில் குழலி (ஆரா), சுப்பு (விக்னேஷ்). இருவரும் சிறுவயது முதல் பள்ளி நண்பர்கள்ஷானால் வேறுவேறு சாதியை சேர்ந்த வர்கள். குழலியுடன் சுப்பு பழகு வதை அவளது சாதிக்காரர்கள் கண்டிக்கின்றனர். இருவரும் பள்ளியில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள். படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று இருவரும் எண்ணுகின்றனர். ஆனால் இருவரும் காதலிப்பதாக எண்ணி குழலிக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்கின் றனர். இதனால் வேதனை அடையும் குழலி ஊரைவிட்டு ஓடிச் சென்று படிக்க முடிவு செய்கிறாள். சுப்புவும் அவளுடன் செல்ல முடிவு செய்கிறான். இருவரும் ஊரை விட்டு செல்வதை அறிந்ததும் குழலியின் உறவினர்கள் அவர் களை தேடிப்பிடிக்கின்றனர். குழலியை சாதி வெறியர்கள் தாக்க அதில் அதில் இறக்கிறாள். சுப்பு என்ன ஆகிறான் என்பதற்கு படம் பதில் அளிக்கிறது.
காதலை பிரதானப்படுத்தாமல் இரு இளசுகள் கல்வி கற்க சாதி வெறியர்களை எதிர்த்து போராடுவது படத்தின் பிரதான கரு என்பது பாராட்டதக்க விஷயம்.
இளம்ஜோடிகளாக விக்னேஷ், ஆரா நடித்திருக்கின்றனர். புதுமலர்கள்போல் இருவரும் இளமை ததும்ப ஜொலிக்கின் றனர்.
தோட்டத்தில் மயங்கி விழும் ஆராவை வைத்தி யரிடம் விக்னேஷ் டூவீலரில் அழைத்து வர அதைக் காணும் சாதிக் காரர்கள் விக்னேஷை தாக்க வரும் முதல் காட்சியே கதை சாதி வெறியர் களின் தோலுரிக்கப் போகிறது என்ற புரிதலை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் அதையே சீனுக்கு சீன் வைத்து சலிப்பு தட்டச் செய்யாமல் விக்னேஷ், ஆராவின் காதல் அழகை காட்டி, காட்சிகளை வண்ணமயமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
விக்னேஷ், ஆரா நடிப்பில் எதார்த்தம் இழையோடுகிறது. கிளைமாக்சில் , “என்னை படிக்க விடுங்கடா” என்று ஆரா உயிருக்கு போராடும் நேரத்திலும் புலம்புவது பதை பதைக்க வைக்கிறது.
சாதி வெறியர்களின் மீது காரி உமிழ்வதன் மூலம் ஒருவரை யாவது திருத்தினால் அது படத்துக்கு கிடைத்த வெற்றி.
படத்தின் மற்றொரு ஹைலைட் டி.எம் உதயகுமாரின் இசை. பாடல்கள் ஒவ்வொன்றும் ராஜாவின் மெட்டுக்களாய் ஒலிக்கிறது. ஒப்பாரி பாடல் தவிர மற்ற பாடல்கள் எல்லாமே தேனாய் பாய்கிறது. கல்யாணம் கல்யாணம் பாடல் கால்களை தரையில் தாளம்போட வைக்கிறது.
கே பி. வேலு, எஸ் ஜெயராமன், எம்.எஸ். ராமச்சந்திரன் தயாரித்தி ருக்கின்றனர்.
ஷமீர் அழகான காட்சி பதிவு கண்களுக்கு குளுமை
இயக்குனர் சேரா கலையரசன் கிராமத்தில் உலவும் சாதிய கொடுமையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.
குழலி- ராசாவின் இசை கேட்டபடி ஒரு கிராமத்தில் சுற்றிய அனுபவம்.
OPENMICTAMIL RATING OUT OF 5