ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது டிராமா. பெயருக்காக எடுக்காமல் சின்சியர் உழைப்புடன் இயக்கி யிருப்பது சஸ்பென்ஸான கதையின் கிளைமாக்ஸ் உணர்த்துகிறது.
ஒரு போலீஸ் நிலையத்தில் முழுகதையும் தொடங்கி நடந்து முடிகிறது. புதிதாக பொறுபேற்கும் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பாலா விரைப்பாக இருக்கிறார். அங்கு இருக்கும் மற்ற போலீஸாரில் ஹெட் கான்ஸ்டபிள் எல்லோரிடமும் வம்பிழுக்கிறார். சப் இன்ஸ்பெக்டரை காண அவரது காதலி காவ்யா பெல்லு வருகிறார். காதல் ஜோடியொன் றும் அடைக்கலம் கேட்டு வருகிறது. காவ்யா பெல்லு அங்கு கேக் வெட்டி பிறந்த தினம் கொண்டாடு கிறார். திடீரென்று கரன்ட் கட் ஆகிறது. கரன்ட் வந்தவுடன் பார்த்தால் ஏட்டு சார்லி கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்கின்றனர். யார் கொலை செய்தது என்பதை விசாரிக்க டி ஜி பி கிஷோர் வருகிறார். தீவிர விசாரணை நடத்தி கொலை கானை எப்படி க்ண்டுபிடிக்கிறார். என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
தொடக்கம் முதல் போலீஸார் அடிக்கும் லூட்டியுடன் கலகலப்பாக நகர்கிறது கதை. படத்தில் கிஷோர் உள்ளிட்ட 10 பேர்கள்தான் நடித்தி ருக்கிறார்கள் ஆனால் படம் சுவரஸ்யமாகவும் யார் கொலை காரன் என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாமலும் பலரையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வருகிறது.
கிஷோர் விசாரணையை தொடங்கியவுடன் பரபரப்பும் தொற்றிக்கொள்கிறது. அவரது மிரட்டலும் உருட்டலும் மட்டுமல்ல அவருக்கு உதவியாக வரும் திருநங்கையின் மிரட்டலான நடவடிக்கைகளும் காட்சியை வேகப்படுத்துகிறது. இவர்தான் கொலையாளி என்று தெரிய வரும்போது புருவங்கள் அதிர்ச்சி ஆச்சர்யத்தால் உயர்கிறது.
இயக்குனர் அஜூ கிழுமலாவின் சிங்கிள் ஷாட் இயக்கத்திலான இப்படம் எடிட்டிங் செய்து உருவாகும் சஸ்பென்ஸ் படங் களுக்கு எந்தவிதத்திலும் சளைத்ததில்லை.
ஒளிப்பதிவாளர் ஷினோஷ்க் கேமிராவை தோள் பட்டையிலி ருந்து இறக்காமல் ஓடி ஓடி படமாக்கியிருக்கும் வலியை உணர முடிகிறது.
பிஜிபால் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
சின்ன சின்ன குறைகள் இருந் தாலும் அது கிளைமாக்ஸ் தரும் அதிர்ச்சியில் கரைந்துபோகிறது.
டிராமா – கிரைம் த்ரில்லர்.
OPENMICTAMIL RATING OUT OF 5
