Home / cinema / Cinema News / துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2.

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள்.

சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார்.இவர் இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார் இதை தொடர்ந்து விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.

காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் ஜூலை 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

About Publisher

Check Also

Thalapathy69 announcement!

KVN Productions is thrilled to officially announce its upcoming project, Thalapathy-69 as its first Tamil …