Home / Uncategorized / Vezham Movie Review

Vezham Movie Review

தனிமையில் வாழும் ஹீரோ அசோக் செல்வன், ஒரு கட்டத்தில் அவரது காதலி ஐஸ்வர்யா மேனன் சைக்கோ கொலைகாரர்களால் கொலை செய்யப்படுகிறார். அவரை எதற்காக கொலை செய்தார்கள். கொலை செய்த நபர் யார் என்ற கோணத்தில் செல்லும் ஒரு சைக்கோ கில்லர் கதைதான் இது.

ஒரு சைக்கோ கில்லர் கதை அல்லது கொலையாளி யார் என்று கண்டுபிடிக்கும் கதைக்களத்தில், திரைக்கதை முடிந்தவரை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் மேக்கிங் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்த மேக்கிங்கிற்கு ஏற்றாற்போல் திரைக்கதையும் நம்பும்படி எந்தவித லாஜிக் மீறல்களும் இல்லாமல் முடிந்த அளவு நேர்த்தியாக அமைய வேண்டும். அந்த வகையில் கதையில் ஒரு சில இடங்களில் சிறிய லாஜிக் மீறல் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த வேழம் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல திரைப்படமாக இருக்கும்.

இது போன்ற படங்களில் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் நம்பி தான் முழு கதையும் நகரும். அந்த கிளைமாக்ஸ் ட்விஸ்ட் மக்கள் எதிர்பார்க்காத வகையில் இருந்துவிட்டால் படம் வெற்றி. இல்லை என்றால் தோல்வி. அதை வைத்து பார்க்கும்போது இந்த படத்தில் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத வகையில் எதிர்பார்க்காத நேரத்தில் மிகப்பெரிய திருப்பத்தை படம் சந்திக்கும். அந்த நேரத்தில் இருந்து நாம் இதுவரை படத்தில் பார்த்தது எல்லாம் பொய் தானா என்று நம்முடைய எண்ணத்தை மாற்றும் அளவிற்கு இருக்கும்.

அது போன்ற ஒரு மேஜிக் இந்த கதையின் கிளைமாக்ஸ்க்கு இருக்கிறது. அதனால் இந்த படத்தை நிச்சயம் ஒருமுறை திரையரங்கில் போய் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

பிளஸ்

த்ரில்லர் படத்தை பார்த்த அனுபவத்தை நிஜமாகவே முதல் பாதி ரசிகர்களுக்கு கொடுத்தது. ஊட்டி அழகை மறைத்து படத்திற்கு தேவையான சோக ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளரும் துக்க பின்னணி இசையை இசையமைப்பாளரும் கொடுத்துள்ளனர். அசோக் செல்வன் தான் அந்த கொலைகாரனா என்கிற ரேஞ்சுக்கு கதை நகர்வதெல்லாம் சுவாரஸ்யத்தின் உச்சம். அதை விட கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் வேறலெவல்

மைனஸ்

நல்லா வந்திருக்க வேண்டிய படத்தை இரண்டாம் பாதியில் இயக்குநர் தேவையில்லாமல் சுற்றி வளைத்து சொல்லியிருப்பதை தவிர்த்து இருக்கலாம். எழுத்தில் அந்தளவுக்கு க்ரிப் இல்லாமல் போனது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. பல இடங்களில் அடுத்து இந்த காட்சி தான் வரும், அவங்க ஒன்றாக சேர்ந்துடுவாங்கன்னு ரசிகர்கள் கதை சொல்வது அப்படியே திரையிலும் வருவது வேழத்தின் பலத்தை வீணடித்து விடுகிறது.

#Vezham – 2.5/5 A Beautiful Love revenge Drama that comes with many twists and turns . Each & every character in the film performed well .

Image

About Publisher

Check Also

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly

Global Star Ram Charan’s RC16 with an internationally acclaimed team launched extravagantly Global star Ram …