Wednesday , February 12 2025

En Paarvayil Unnai Thedi – Romantic Album Song

‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம் ! திரைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து கனவுத் தொழிற்சாலையில் முட்டிமோதும் இளைஞர்கள் பலருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு போல் உதவி,வாய்ப்பு வாசலில் உள்ளே நுழைய வழி வகுப்பவை குறும்படங்கள் மற்றும் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை. அப்படிப்பட்ட கனவைச் சுமந்திருக்கும் இளைஞர்தான் துளசிராம். அவர் நாயகனாக நடித்து தன் M9 ஸ்டுடியோ சார்பில் தயாரித்திருக்கும் படைப்பு தான் ‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம். ‘அன்பே உன் பார்வை என்னை கொல்கின்றதே ! நீ சென்றால் காற்றும் என்மேல் வீசுதே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதல் மொழி பேசும் இந்த ஆல்பத்தில் துளசிராம், சிம்ரன்

நடித்துள்ளார்கள். சதீஷ் இயக்கியுள்ளார். இதற்கு இசை- கிங்ஸ்லி, ஒளிப்பதிவு- தினேஷ் ,நடனம்- சதீஷ், பாடல் எழுதியுள்ளவர் ஜோயல் கிங்ஸ்டன், படத்தொகுப்பு -திருச்செல்வம் என, புதிய இளைஞர்களின் கூட்டணியில் இந்த ஆல்பம் உருவாகி உள்ளது. ஒரு திரைப்படத்திற்கான கனவோடு இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார்கள் துளசிராம் குழுவினர். “இந்த சிறு முயற்சிக்கு பாராட்டுக்களை உங்கள் பார்வைகளின் மூலம் கொடுத்தால் நாங்கள் பெரிய முயற்சியில் இறங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்.உங்கள் கண்ணசைவுக்காகக் காத்திருக்கிறோம். பாருங்கள் வாழ்த்துங்கள்” என்கிறார் துளசிராம்.

About Publisher

Check Also

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! …