Home / cinema / Cinema News / அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் ‘தேஜாவு.’

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘தேஜாவு’. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், ‘மைம்’ கோபி, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியீட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் படத்தின் நாயகனான அருள்நிதியின் பிறந்த நாளான ஜுலை 21-ம் தேதி வெளியிடவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.

About Publisher

Check Also

டிமான்ட்டி காலனி 2′ ZEE5

*அட்டகாசமான ஹாரர் அனுபவத்திற்குத் தயாராகுங்கள் !,  திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  ‘டிமான்ட்டி காலனி 2’   ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !**இந்த …