Thursday , February 13 2025

ட்ரெண்ட் செட் செய்யும் விதமாக உருவாகியுள்ள “Love you baby” ஆல்பம் சாங்.

விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் லெரிக்ஸ் என புதுவிதமாக.. Love you baby என்ற ஆல்பம் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. இந்த Love you baby ஆல்பம் பாடலை அனுகிரஹா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் S காமாட்சி கனிமொழி தயாரித்துள்ளார்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து கன்டென்ட் புடித்திருக்கும் பிரசாத் ராமன் இந்தப்பாடலை அட்டகாசமாக இயக்கியிருக்கிறார்.

இப்பாடலின் வெற்றியை தனது கெத்தான குரலால் பாடி உறுதி செய்திருக்கிறார் ப்ரேம்ஜி அமரன். அவர் பாடியுள்ள பாடல்களில் இப்பாடல் அதிக கவனம் பெறும் என்கிறார்கள்

இந்தப்பாடலில் நடிகர் சந்தோஸ் பிரதாப் நடித்துள்ளார். சமீபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்திருந்த சந்தோஸ் பிரதாப், கதை திரைக்கதை வசனம் இயக்கம், பொதுநலன் கருதி, என் பெயர் ஆனந்தன், பஞ்சராக்ஷரம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அவர் இப்பாடலில் எனர்ஜியோடு நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக இப்பாடலில், என்னங்க சார் உங்க சட்டம், சகா ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்ற ஐரா நடித்துள்ளார்.
மேலும் இப்பாடலில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போல ஒரு கான்செப்டை பாடலுக்குள் வைத்திருக்கிறார்கள். காதலர்களை சேர்த்து வைப்பவராக ராகுல் தாத்தா அசத்தி இருக்கிறார்.

இந்தப்பாடலை தனது தனித்துவ இசையால் அழகுப்படுத்தி இருக்கிறார் இசை அமைப்பாளர் ராக்கேஷ் அம்பிகாபதி.

“டசக்கு டசக்கு”, “வா மச்சானே” ஆகிய மெகா ஹிட் பாடல்களை எழுதிய முத்தமிழும், பிரசாத் ராமனும் இந்தப்பாடலை எழுதியுள்ளனர்.

ஒரு பாடலின் விஷுவல் அழகாயிருப்பது கேமராமேன் கையில் தான். அதை வெகுசிறப்பாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி,
மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான எல்லா முகாந்திரங்களோடு உருவாகி இருக்கும் இப்பாடலுக்கு ரிச்சட் கிறிஸ்டோபர் நடனம் அமைத்துள்ளார். தனிக்கவனம் செலுத்தி இப்பாடலுக்கான எடிட்டிங் பணியைச் செய்துள்ளார் எடிட்டர் தரணி பால்ராஜ். மேக்கப் பணியை சுப்ரஜா வாசுதேவன் செய்துள்ளார். உடையலங்காரம் கெளசல்யா மாரிமுத்து, ஸ்டில் போட்டோஸ் கிப்டான் சந்துரு.

மிகவும் பாசிட்டிவ் மோட்-ல் தயாராகி இருக்கும் இப்பாடல் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

About Publisher

Check Also

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் “கிஸ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! …