Monday , January 13 2025

மெகா ஸ்டார் சிரஞ்சீவி -சல்மான் கான் இருவரையும் திரையில் நடனமாட வைக்கும் பிரபுதேவா

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் ‘காட்பாதர்’ படத்திற்காக அப்படத்தின் நாயகன் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நாட்டியத்தை ‘நடனப்புயல்’ பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கொனிடேலா புரொடக்சன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காட்பாதர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் இணைந்து திரையில் நடனமாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதால், இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். இவர்களுக்கு சிறப்பான நடனத்தை உருவாக்க நடனப்புயல் பிரபுதேவா நடன இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த பாடலுக்கு எஸ். எஸ். தமன் இசை அமைக்கிறார்.

விரைவில் இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்றும், சிரஞ்சீவியும், சல்மான்கானும் திரையில் ஒன்றாக நடனமாடுவதை பார்ப்பது ரசிகர்களுக்கு அரிய விருந்தாக இருக்கும் என்றும் படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இசையமைப்பாளர் தமன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது…” அரங்கமே அதிரும் வகையில் பிரபுதேவாவின் நாட்டிய வடிவமைப்பில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அவர்களும் இணைந்து நடனமாட இருக்கிறார்கள். திரையில் காணும்போது ரசிகர்களின் உற்சாகம் கரை புரளும்” என பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் இயக்குநர் மோகன் ராஜா, நடன இயக்குநர் பிரபுதேவா, மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் தமன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

‘காட்பாதர்’ படப்பிடிப்பின் இறுதிகட்டத்தில் படக்குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள். நயன்தாரா, இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகர் சத்யதேவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைத்து வருகிறார். பாலிவுட் படங்களில் பணியாற்றிய கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இப்படத்தின் கலை இயக்கப் பணிகளை கவனித்து வருகிறார். ‘காட்பாதர்’ திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

திரைக்கதை & இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் : ஆர்.‌பி. சவுத்ரி & என். வி. பிரசாத்
வழங்குபவர் : கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனங்கள்: கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்.
இசை : எஸ். எஸ். தமன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
கலை இயக்கம் : சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு மேற்பார்வை : வகதா அப்பாராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

About Publisher

Check Also

“தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு  !!

“தருணம்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு  !!ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” பொங்கல் கொண்டாட்டமாக  வெளியாகிறது …