Monday , January 13 2025

12வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி

12வது  ஹாக்கி இந்தியா  தேசிய சீனியர்   பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில்  பங்கேற்க செல்லும்  தமிழக பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,சேகர் மனோகரன்  வாழ்த்தி வழியனுப்பினர்.மே 5-ஆம் தேதி முதல் போபாலில் நடைபெறும் 12வது  ஹாக்கி இந்தியா  தேசிய சீனியர்    பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில்  பங்கேற்க செல்லும்  18 பேர் கொண்ட தமிழக பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி  வீராங்கனைகளை வழியனுப்பினார் அப்பொழுது ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன் உடன் இருந்தார்

12வது  ஹாக்கி இந்தியா தேசிய சீனியர்  பெண்கள் சாம்பியன்ஷிப்  போட்டிகள் மே 5 ஆம் தேதி முதல் தொடங்கி போபாலில்  நடைபெற உள்ளது இப்போட்டியில்  தமிழகத்திலிருந்து சீனியர் ஹாக்கி பெண்கள் அணியினர் அடங்கிய 18 பேர் பங்கேற்க செல்லவுள்ளனர்

 எனவே அவர்களை எழும்பூர் SDAT மேயர் இராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி கலந்துகொண்டு நடைபெற உள்ள ஹாக்கி பெண்கள் போட்டியில் வெற்றி பெற பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.அப்பொழுது ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன் உடன் இருந்தார்

 மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்  ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன்,  செயலாளர் செந்தில் ராஜ்குமார்,பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர்கள் திருமாவளவன்,கிளமென்ட் உள்ளிட்ட  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், மற்றும் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் மற்ற நிர்வாகிகள்  விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

About Publisher

Check Also

Velammal Nexus Felicitates World Carrom Champions with ₹50 Lakh Cash Prizes

🌟 Chennai, December 27, 2024: In a proud moment for Indian sports, Velammal Nexus Group …