சம்மர் ஸ்பெசலாக ரசிகர்களுக்கு ஒரு ஹாரர் காமெடி படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
ஒரு காதல் காரணத்திற்காக ஜென்ஸ் ஹாஸ்டலுக்குள் செல்ல வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கரை ஹாஸ்டலுக்குள் யாருக்கும் தெரியாமல் கொண்டு வருகிறார் ஹீரோ அசோக்செல்வன். பிரியா பவானி சங்கர் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரை ஹாஸ்டலுக்குள் வரவைத்துவிட்டு, பின் வெளியில் அனுப்ப முடியாமல் தவிக்கும் அசோக்செல்வன் & கோவின் அட்ராசிட்டி தான் படத்தின் மொத்தகதையும். எக்ஸ்ட்ரா பிட்டாக படத்தில் ஒரு பேயும் இருக்கிறது. முதல் பாதியில் பேய்ச் சிரிப்பை வரவைக்க முயற்சித்துள்ளார்கள். இரண்டாம் பாதியில் பேயை வைத்து சிரிப்பு காட்ட முயற்சித்துள்ளார்கள். இரண்டும் பாதியிலும் பாதியளவே காமெடி வொர்க்கவுட் ஆகியுள்ளது. சரி பாதிகாமெடி இருக்கே!
திருதிரு முழி குறுகுறு சில்மிஷம் என அசோக்செல்வன் இடது கையால் ஹேண்டில் பண்ணும் அசால்ட் கேரக்டர் என்பதால் அசால்டாக நடித்துள்ளார். பிரியா பவானி சங்கர் மற்ற காமெடியன்களை விட சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
நோட் திஸ் பாயின்ட்: அழகாகவும் இருக்கிறார். அறந்தாங்கி நிஷாவிடம் அறை வாங்கும் அறைகுரை பாதர் கேரக்டரில் நாசர் மாஸ் பண்ணுகிறார். முனிஷ்காந்த் சில இடங்களில் சிரிப்பிற்கு உத்திரவாதம் தருகிறார். ரவிமரியா அவர் பண்ணுவதை காமெடி என்பதையும் காமெடிதானா என்பதையும் ஒருமுறை சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது. சதிஷ் பன்ச்கள் மிகச்சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கின்றன.
OpenmicRating : 2.5/5
Hostel – Hilarious situations till the very end
Don’t miss this jolly entertainer