Home / cinema / Cinema News / “ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C

“ஒன் 2 ஒன்” படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய சுந்தர் C

24 HRS புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் படம் “ஒன் 2 ஒன்”.

சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராகினி திவேதி கதாநாயகியாக நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சுந்தர் C பிறந்த நாளை முன்னிட்டு ஒன் 2 ஒன் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுந்தர் C கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி வாழ்த்து கூறிய அனைருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தனது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் C கொண்டாடியது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு விக்ரம் மோகன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

About Publisher

Check Also

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக …