உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது
இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் “நெஞ்சுக்கு நீதி”. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியது, உதயநிதி ஸ்டாலின் இப்படத்திற்காக இன்று டப்பிங் செய்தார்.
இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
“நெஞ்சுக்கு நீதி” படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.