Home / cinema / Movie Review / ETERNALS – OPEN REVIEW

ETERNALS – OPEN REVIEW

பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழிக்கவும் மனித இனத்தை காப்பாற்றவும் அனுப்பப்படுகிறார்கள். 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் தனி சக்தி இருக்கிறது. இவர்களுக்கு வயதும் ஆகாது, கொல்லவும் முடியாது.


இந்த 10 சூப்பர் ஹீரோக்களும் போராடி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதே 10 சூப்பர் ஹீரோக்களை அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று, ஒவ்வொருத்தராக அழிக்கிறது. மேலும் சூப்பர் ஹீரோக்களின் சக்தியையும் எடுத்துக் கொள்கிறது.

இறுதியில் அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் எப்படி வந்தது? சூப்பர் ஹீரோக்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டார்களா? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்திற்கு அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படம் இட்டர்னல்ஸ். ஆனால்,

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். சாகச காட்சிகள், சண்டைக்காட்சிகள் சிறிது நேரமே இடம்பெறுகிறது. 


சாகச காட்சிகள் பிரம்மாண்டமாக இருந்தாலும், மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. எண்ட்கேம் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் புதிய கதை என்பதால், கதைக்கு மட்டுமே அதிக முக்கியத்தும் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சோலி ஜாவோ. 

ஒளிப்பதிவாளர் பென் டேவிஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. இசையமைப்பாளர் ராமின் டிஜவாடி பின்னணி இசை சிறப்பு. 


ஏஞ்சலினா ஜூலி, ஜெம்மா சான், ரிச்சர்ட் மடடேன், கிட் ஹரிங்டன், குமைல் நஞ்சினி, லியா மேக்ஹுக், டான் லீ, ஹரிஷ் படேல், பாரி கியோகன், லாரன் ரிட்லோஆஃ என பலர் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘இட்டர்னல்ஸ்’ சுவாரஸ்யம் குறைவு.

நடிகர்கிட் ஹரிங்டன்
நடிகைஏஞ்சலினா ஜோலி
இயக்குனர்சோலி ஜாவோ
இசைராமின் டிஜவாடி
ஓளிப்பதிவுபென் டேவிஸ்

OPEN RATING : 3/5

About Publisher

Check Also

Sorgavaasal Movie Review ⭐⭐⭐

Plot Summary Set within the confines of a notorious prison, Sorgavaasal revolves around Parthiban (RJ …