நடிகர் மற்றும் அரசியல்வாதி திரு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 இந்த சீசன் போட்டியாளரான அக்சரா ரெட்டி எனும் ஸ்ரவ்யா சுதாகரால் பல்வேறு சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது
அக்சரா ரெட்டி ஒரு மாடல் அழகியாவார் மேலும் இவர் சர்வதேச அளவிலான அழகிப் போட்டியின் வெற்றியாளருமாவார்.
இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாய்ப்பு அதிகமுள்ள ஒரு நபராகவும் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவராகவும் திகழ்கிறார். இந்நிலையில் 2013 கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார் மேலும் அவ்வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அவருடைய பெயர் ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி.
கீர்த்தனா எனும் நபர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இது குறித்து வெளியிட்ட கீச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி உண்மை என்பது வழக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் பங்கு இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கைதான டிகே பைஸ் கேரளாவைச் சேர்ந்தவர்
நெடும்பசேரி தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான டிகே பைஸ் கேரள திரைத்துறையைச்சேர்ந்த பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
இவர் நடத்தும் தயாரிப்பு மற்றும் மாடலிங் நிறுவனத்தின் வாயிலாக ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டிக்கு இக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.தயாரிப்பு மற்றும் மாடலிங் நிறுவனம் மூலம் டிகே பைஸிடம் தொடர்பில் இருந்த 238 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஸ்ரவ்யா சுதாகரின் துணிச்சலான வாக்குமூலம் இந்த வழக்கு மிகப் பெரிய அளவில் வெளிவந்தது, மைதிலி எனும் நடிகையின் மூலமாகவே ஸ்ரவ்யாவுக்கு பைஸல் அறிமுமாகியுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்கக் கடத்தல் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றின் உதவி இயக்குநருக்கு இதில் தொடர் இருப்பதாக ஒரு சுவாரஸ்யமான தகவலை தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பாக சிபிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரவ்யா குற்றமற்றவர் தங்கக் கடத்தலில் அவருக்கு தொடர்பு இல்லை எனவும் வழக்கு சம்பந்தமுள்ளதாக கருதப்பட்ட 238 பேரில் ஒருவராக அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரவ்யா அளித்த தகவல்களாலேயே மைதிலி உள்ளிட்ட பைஸூடன் தொடர்புடைய நபர்கள் குறித்த விவரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அடிப்படையில் பைஸ் உள்ளிட்ட பல்வேறு கடத்தலில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிஜ வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருடைய பெயர் 2013ல் நடத்தப்பட்ட விசாரணை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.
ஆனால் ஏன் அவர் தன் பெயரை அக்சரா ரெட்டி என மாற்றிக்கொண்டார்.
.
ஸ்ரவ்யா சுதாகரிடம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக 2013ல் விசாரணை நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் தொடர்ந்து அவர் மாடலிங் துறையில் இருந்து வந்துள்ளார்
இரண்டு வருடங்களுக்கு பிறகு சோதிடர் ஒருவரின் அறிவுரையின் விளைவாகவே அவர் தன் பெயரை அக்சரா ரெட்டி என மாற்றிக்கொண்டுள்ளார்
திரைத்துறைச்சேர்ந்த பிற பிரபலங்கள் போலவே அதிர்ஷ்டம் இருக்கும் என பெயர் மாற்றம் செய்துள்ளார். கோலிவுட்டில் கோலோச்சிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியம் குரியன், நடிகர் ஜுவாவின் இயற்பெயர் அமர், நடிகை சினேகாவின் இயற்பெயர் சுஹாசினி ராஜாராம்.
மேலும் மேலே குறிப்பிட்ட பிரபலங்கள் தங்கள் இயற்பெயரை வெளியிட்டதில்லை, அவர்கள் தங்களுடைய மாற்றம் செய்யப்பட்ட அதிர்ஷ்டம் பெயர்களாலே அறியப்பட்டனர்
அது போன்ற காரணங்களாலே ஸ்ரவ்யா அக்சரா என பெயர் மாற்றம் செய்துள்ளார். மேலும் மாடலிங் துறையில் இருக்கும் பலருக்கு இந்த பெயர் மாற்றம் குறித்து அறிந்துள்ளனர்.
பொதுமக்கள் அவருடைய அழகுபடுத்தல் அறுவை சிகிச்சை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
அக்சரா ரைனோபிளாஸ்டி எனும் சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார் சுவாசப்பதில் பிரச்சினை இருத்த காரணத்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் அவருடைய உருவ மாற்றம் தொடர்பாக வெளியிட்ட புகைப்படங்கள் இளம் வயதில் எடுக்கப்பட்டவை எனவே சிறிது மாற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அறுவை சிகிச்சை மற்றும் முக அமைப்பு மாற்றங்கள் குறித்த சர்ச்சை
திரை உலகத்திற்கு ஒன்றும் புதிதல்ல
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசனின் மகள் சுருதி மூக்கு, உதடு மற்றும் தாடை பகுதிகளை அறுவை சிகிச்சையின் மூலம் சீர்படுத்திக் கொண்டார்
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவும் அது போலவே மூக்கு மற்றும் தாடை அமைப்பில் சில திருத்தங்கள் செய்து கொண்டுள்ளார் மேலும் திரையில் தங்களை அழகாக காட்சிப்படுத்திக்கொள்ள சமந்தா, காஜல் என பிற நடிகைகளும் இது போன்ற சிகிக்சைகளை எடுத்து கொண்டுள்ளனர்
எனவே ஸ்ரவ்யா சுதாகர் ரெட்டி என்கிற அக்சரா ரெட்டி தன்னை திரைத்துறையில் நிலை நிறுத்திக் கொள்ள மற்ற பிரபலங்கள் போல சிகிச்சை எடுத்துக் கொள்வது சாதாரண நிகழ்வே.