பேங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது.
அதன் நிறைவு விழாவில் இன்று(17.10.21) சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு பெற்றார்.
மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடித்து ஆடியோ ரிலீசுக்கு தயாராகி வரும் கட்டில் திரைப்படம் சர்வதேச விருதை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு எடிட்டர் பீ.லெனின் கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார்.
விரைவில் தியேட்டர்களில் கட்டில் திரைப்படும் என்று இயக்குனர்
இ.வி.கணேஷ்பாபு தெரிவித்தார்