Home / cinema / Cinema News / 100 விஐபிகள் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்

100 விஐபிகள் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர்  வெளியிட்டிருக்கிறார்கள்.நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள்  ,அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர்,இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார்,இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்,  ஊடகப் பிரபலம் ரங்கராஜ் பாண்டே, நடிகர், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் போன்ற நூறுபேர் இன்று 10 ஆம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு  வெளியிட்டுள்ளார்கள்.இது இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வாகும்.
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும்  ‘வாஸ்கோடகாமா’  படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.
கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை  ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.இந்தத் தயாரிப்பாளர் இயக்குநர் கூட்டணியில் ஏற்கெனவே ‘தேவதாஸ் பார்வதி ‘ படத்தின் பாடலை திரை உலகமே பாராட்டியது எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ பாடல் வெளியாகி பலரது பாராட்டையும்  பெற்றது 

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது,
“படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு ‘வாஸ்கோடகாமா’ என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை.குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும்  குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு  சொல்லும் படம்தான் ‘வாஸ்கோடகாமா’. இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது.உடனே சம்மதம் கூறி  அடுத்த நாளே ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இந்தக் கதை அவரைக் கவர்ந்து விட்டது. 
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி ,வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
 இது வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கொண்ட சுவாரஸ்யமான படமாக உருவாக இருக்கிறது” என்கிறார் இயக்குநர்.
படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர்  ‘நான் சிரித்தால் ‘போன்று சில படங்களில் ஒளிப்பதிவு  செய்துள்ளவர். இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு  இசையமைத்திருக்கிறார் .மேலும் பல சுதந்திரமான இசை ஆல்பங்களை உருவாக்கியவர்.சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் ‘உறியடி’ , ‘சூரரைப்போற்று’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை. இவர் ‘உறியடி 1’, ‘உறியடி2 ‘படங்களில் பணியாற்றியவர். எடிட்டிங் தமிழ்க்குமரன் .இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர். 
 படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ்  நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார். 
படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.
100 celebrities unveil the first look of ACTOR NAKUL’S VASCODAGAMA 
Here’s a first-of-its-kind never-seen-before first look launch of a movie! It’s pretty amazing, which is turning spotlights upon the Tamil industry. 100 celebrities come together to unveil the first look of a movie titled ‘VASCODAGAMA’ on the auspicious occasion of Vinayakar Chathurthi. The big names are Sivakarthikeyan, Aishwarya Rajesh, Aari, Ganesh Venkatraman, R.K. Suresh, Athulya Ravi, Subiksha, directors K.S. Ravikumar, Ramkumar, Music Director D Imman, Producer G. Dhananjayan, eminent journalist Rangaraj Pandey, and many more prominent personalities in the film industry, media, politics will reveal the first look on their respective social media pages. 
The film is produced by DATO B Subaskaran of 5656 Productions, one of the celebrated iconic entrepreneurs in Malaysia. RGK (a) R.G. Krishnan is directing the movie apart from penning the story, screenplay, and dialogues. This producer-director duo became popular for their previous collaboration for a movie titled ‘Devadas Parvathi’, which featured the final song of Veteran Playback Singer ‘Ennodu Baasha’. 
Director R.G. Krishnan says, “The film’s title has significant relevance to the protagonist’s character name. Charles Darwin’s Theory of Evolution involving Ape to Man is known to everyone. The process of civilization in various aspects has kept occurring across millions of years. So, what’s next? While ‘Change’ has proved to be the only ‘Unchangeable’ element in the history of mankind, how would the human minds and nature transform after 100 years from now? The movie revolves around this premise, narrated with fun and entertainment. Apart from Nakul, the star cast boasts of famous actors like director KS Ravikumar, Munishkanth, and many more artists. Talks are going on with a top league actress to play the female lead and the announcement on this along with the villain would be made soon. The movie is made on a grand scale, and has commercial ingredients that will appeal to universal audiences.” 
The technical team includes Vaanjinathan (DOP), who has cranked the camera for movies like Naan Sirithaal. N.V. Arun is composing music, and he holds a special mention for recording the final song of Veteran playback singer SP Balasubramaniam titled Ennoda Baasha. Besides, he has composed and created many indie albums, which have found phenomenal appreciation.  Vicky is choreographing action sequences (Uriyadi, Soorarai Pottru fame), Art director Ezhumalai (Uriyadi 1 and Uriyadi 2 fame), Editor Thamizh Kumaran, who has worked in several short films. The movie has four songs, which are choreographed by Sandy Master. 
 The entire shooting of VASCODAGAMA will be filmed in and around the locales of Chennai.

About Publisher

Check Also

TREND LOUD INDIA DIGITAL AND OPEN WINDOW

Chennai, January 2022: Trend Loud India Digital and Director/Producer Balaji Mohan’sOpen Window are proud to …