Home / cinema / Cinema News / இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை” .

இயக்குநர் ஹரி – அருண்விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் “யானை” .

இதன் பர்ஸ்ட் லுக்  இன்று மாலை வெளியாகிறது. அருண்விஜய் நடிக்கும் 33வது படமான இதை, விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், ஆர்யா, ஆதி, விஜய்ஆண்டனி, டோவினோ தாமஸ்,  அனுராக் காஷ்யப்,   விஷ்ணுவிஷால், சாந்தனு, அதர்வா, விக்ரம்பிரபு, சிபிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ்சிவன், சீனுராமசாமி, பிரசன்னா, அசோக்செல்வன், கிருஷ்ணா, ஆர்.பார்திபன், சேரன், கவுதம்வாசுதேவ்மேனன், வெங்கட்பிரபு, அறிவழகன்,சாம்.சி.எஸ், நவீன், வரலட்சுமி,ஐஸ்வர்யாராஜேஷ், ரெஜினாகசண்ட்ரே, நிக்கிகல்ரானி, மஹிமாநம்பியார், வேதிகா, கார்த்திக்நரேன், அஜய்ஞானமுத்து ஆகிய 33 சினிமா பிரபலங்கள் சேர்ந்து இன்று வெளியிடுகிறார்கள்.

*இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும்  வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும்  நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனபெயரிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட,  படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க பரபர திரைக்கதையில்,  
நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ்    புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல்

About Publisher

Check Also

TREND LOUD INDIA DIGITAL AND OPEN WINDOW

Chennai, January 2022: Trend Loud India Digital and Director/Producer Balaji Mohan’sOpen Window are proud to …