Breaking News
Home / cinema / Cinema News / மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன் – ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன் – ரசிகர்கள் உற்சாகம்

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியாகும் உலகம் சுற்றும் வாலிபன்

மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன் – ரசிகர்கள் உற்சாகம்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன் வெளியானது.

இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான், கதை. நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார், இயக்குனர் எம்.ஜி.ஆர்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்’ உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் செப்டம்பர் 3ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறார்கள்.

About Publisher

Check Also

Embark on a gripping chase – Por Thozhil’s stunning teaser out now!

Embark on a gripping chase – Por Thozhil’s stunning teaser out now! Por Thozhil (The …