Home / Commercial / கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நடிகை ரம்யா நம்பீசனையும் சந்திக்க

கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நடிகை ரம்யா நம்பீசனையும் சந்திக்க

சென்னை, 15 ஆகஸ்ட் 2021: ராஜா ஜல்சாவின் தீவில் ஆவிகளின் கூட்டம் ஆக்கிரமிக்கவிருக்கும் நிலையில் கலர்ஸ் தமிழின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 இன்னும் பயங்கரமானதாக, கிளுகிளுப்பும், குதூகலமும் நிறைந்ததாக மாறப்போகிறது.  தங்களது தீவில் நிகழ்கின்ற மர்மமான, புதிரான நிகழ்வுகள் பற்றி புலன்விசாரணை செய்ய ராஜாவும், அவரது தீவுவாசிகளும் புறப்படுகிறபோது நிகழ்கின்ற நகைச்சுவை நிறைந்த நிகழ்வுகளை கண்டு மகிழ, 2021 அகஸ்ட் 15, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலை டியூன் செய்யுங்கள்.  ராஜா ஜல்சாவாக ரோபோ சங்கரும், ராஜமாதாவாக நடிகை ஷகிலாவும், பேபி மாதாவாக நடிகை ஜாங்கிரி மதுமிதாவும் கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும், சிறப்பு பார்ட்னர் டக்கர் மசாலா வழங்கும் இந்த வார எபிசோடை மேலும் குதூகலம் ஆக்க எண்ணற்ற ரசிகர்களின் கனவுக்கன்னியான நடிகை ரம்யா நம்பீசன் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொள்கிறார்.

நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் கன்னித்தீவு உல்லாச உலகம்  2.0 – ன் இந்த வார எபிசோடில் கேளிக்கை நிறைந்த பேயோட்டுதல், புத்துணர்ச்சியூட்டும் பெர்ஃபாமென்ஸ் மற்றும் இதுபோல இன்னும் பல மனதை ஈர்க்கும் அம்சங்களை ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு விருந்தாக படைக்கவிருக்கிறது.  ராஜா ஜல்சாவுக்கும், சிறப்பு விருந்தினர் ரம்யா நம்பீசனுக்கும் இடையிலான நகைச்சுவையான உரையாடலும் மற்றும் அடக்கமுடியாத சிரிப்பை பார்வையாளர்களிடம் வரவழைக்கின்ற அமுதவாணனின் நகைச்சுவை நிறைந்த நடிப்பும் பார்வையாளர்களை பரவசப்படுத்துவது நிச்சயம். 

இந்நிகழ்ச்சியில் தனது இனிய அனுபவம் குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது: கிங் ஜல்சாவின் உலகத்தில் பங்கேற்றது உண்மையிலேயே கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.  இந்த தீவு, இதன் குடியிருப்புவாசிகள் மற்றும் இந்த அனுபவத்தின் ஒரு அங்கமாக இடம்பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவதற்கான பயணம் என அனைத்துமே எனக்கு அளவில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது.  இந்த நிகழ்ச்சியின் அரங்குகளிலிருந்த எனர்ஜி அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி, பார்ப்பவர்களையும் மிக எளிதாக தொற்றக்கூடியது.  இவர்களுக்காக நாங்கள் போட்டிருந்த ஸ்கெட்ச்களை பார்வையாளர்கள் கண்டிப்பாக நேசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.  பொது பொழுதுபோக்கு அலைவரிசை தளத்தில் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கும் தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்க கலர்ஸ் தமிழ் எப்போதும் தீவிரமாக செயல்பட்டு வந்திருக்கிறது.  அந்த வகையில் பார்க்கையில், நகைச்சுவை தளத்தில் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சி புதிய தரஅளவுகோல்களை நிர்ணயித்திருக்கிறது என்று நிச்சயமாக சொல்ல முடியும்.”

கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்பது, கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி  வருகிற மிக சமீபத்திய காமெடி நிகழ்ச்சியில் ராஜா ஜல்சானந்தா மற்றும் அவர் வசிப்பிடமான கன்னித்தீவில் நிகழும் சம்பவங்களை நகைச்சுவை பொங்க இது சித்தரிக்கிறது.  ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிற இந்நிகழ்ச்சியானது, நான்கு பிரிவுகளாக இடம்பெறுகின்றன.  ஒவ்வொன்றும் மற்றதைவிட அதிக கேளிக்கை நிறைந்ததாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.  பிரபல காமெடியனும், நடிகருமான ரோபோ சங்கருடன் பிரபல சின்னத்திரை கலைஞரும், நடிகையுமான மதுமிதா, பேபி மாத என்ற கதாபாத்திரத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.  பழம்பெரும் நடிகை ஷகிலா ராஜமாதாவாக இதில் இணைந்திருப்பது இந்நிகழ்ச்சியின் தரத்தை இன்னும் உயர்த்துகிறது.  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் இந்த காமெடி கிளப்பில் ஆல் ஆக்சஸ் ராஜகுரு என்ற கதாபாத்திரத்தில் திண்டுக்கல் சரவணன், மாதா ஜிங்காராவாக நடிகை அன்ன பாரதியும், மாதா ஜால்ராவாக நர்மதாவும், தீவின் பிஆர்ஓ பிச்சுமணியாக அடாவடி அன்சரும் மற்றும் கலையரசனாக நடிகர் அமுதவாணனும் இணைந்திருக்கின்றனர்.  பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு கலையரசனின் குடியிருப்புவாசிகளாக பிரகாஷ், விக்னேஷ் சிவா, ரஜினி வேலு ஆகியோர் செய்யும் சேட்டைகளும், நடிப்பும் சிறப்பான பங்களிப்பை செய்கின்றன.  

கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 என்ற அற்புதமான நகைச்சுவை தொலைக்காட்சியை காண 2021 ஆகஸ்ட் 15, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையை மறவாமல் டியூன் செய்யுங்கள். அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். தங்களது சௌகரியத்திற்கேற்றவாறு எந்த நேரத்திலும் கலர்ஸ் தமிழின் நிகழ்ச்சிகளைக் கண்டுமகிழ VOOT – ஐ பார்வையாளர்கள் டியூன் செய்யலாம்.

About Publisher

Check Also

வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், அதன் புதிய …