Home / Commercial / ‘பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’

‘பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’

சிறப்பான மற்றும் முக்கியமான புத்தாக்கங்களான பாக்கெட் யுவி ஸ்டெரிலைஸர், யுவி சேஃப், மை ஓவர்ஆல்ஸ் மற்றும் ‘மை’ மாஸ்க்ஸ் போன்றவற்றிற்காக சிறப்பாக அறியப்படும் இந்தியாவின் முதல் பாதுகாப்பு லைஃப்ஸ்டைல் பிராண்டான ‘மை’, இந்நாட்டில் பள்ளிகளும், கல்லூரிகளும் கோவிட் தொற்றுப் பரவலுக்குப் பிறகு மீண்டும் பாதுகாப்பாக திறக்கப்படுவதற்காக கல்வி நிலையங்களோடு கைகோர்த்திருக்கிறது.  பள்ளி மற்றும் கல்லூரியில் அவர்களது வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு அணிவதற்காக இதற்கெனவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற கார்பன் ஃபில்டர் கொண்ட முககவசங்களையும் மற்றும் கவர்ஆல்களையும் ‘மை’ பிராண்டு வழங்குகிறது. 

ஊரடங்கு வடிவத்தில் பொது முடக்கமானது, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நேரடியாகப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பது என்ற நிலை மாறி, “தொலைதூர கற்றல்” முறைக்கு வேறு வழியின்றி திடீரென்று மாறியது.  மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையிலான அனைத்து தகவல் பரிமாற்றமும் ஸ்மார்ட் போன் வழியாகவே நிகழ்ந்தது.  அனைத்து நிலைகளிலும் நேரடியாக கல்வி கற்பிக்கும் முறையை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக அனைத்து பள்ளிகளும் பின்பற்றுவதற்கு கோவிட் – 19 வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட அரசு திட்டமிட்டிருக்கிறது. பள்ளிக்குச் சென்று வகுப்பறையில் நேருக்கு நேர் கல்வி கற்பதை மீண்டும் தொடங்குவது ஒரு நேர்மறை அம்சமாகவே இருக்கிறது; எனினும், கோவிட் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தளர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பும்  அத்தியாவசியமானதாக  இருக்கிறது.

மை’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் திரு. கவின் குமார் கந்தசாமி பேசுகையில், “குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இடமான பள்ளிக்கு அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக கல்வி நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  நடப்பு சூழ்நிலை குறித்து பெற்றோர்கள் இன்னும் அதிக ஐயமும், கவலையும் கொண்டிருக்கும் நேரத்தில் கோவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கல்வி நிறுவனங்கள் தவறாது பின்பற்றுகிறபோது, கவலையும், அச்சமும் குறைந்து மறைந்துவிடும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட கவர்ஆல்கள் மற்றும் எமது பிரத்யேக முககவசங்களோடு பாதுகாப்பிற்கான அனைத்து நெறிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும்போது பள்ளிக்கு உங்களது குழந்தை பாதுகாப்பாக மீண்டும் சென்று வருவதை மை உறுதி செய்கிறது.  ‘மை’ பாதுகாப்போடு மீண்டும் பள்ளிக்கு செல்லும் மனநிலை இப்போது இறுதியாக வந்துவிட்டது,” என்று கூறினார்.

“மை” (‘MY’) குறித்து:

உலகின் முதல் பாதுகாப்பு லைஃப்ஸ்டைல் பிராண்டு என புகழ்பெற்றிருக்கும் ‘மை’ (My), 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.  தங்களது பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு புதிய இயல்புநிலைக்கு மக்கள் பழகிக்கொள்வதற்கு உதவ எளிமையான, ஆனால் அதே வேளையில் நிலைப்புத்தன்மையுள்ள தீர்வுகளை வழங்கும் நோக்கத்தோடு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தொடர்ச்சியான புத்தாக்க நடவடிக்கைகளின் வழியாக நிர்பந்தம் என்பதை ஒரு சிறப்பான அனுபவமாக மாற்றுகின்ற ஒரு திருப்தியுள்ள லைஃப்ஸ்டைல் விருப்பத்தேர்வை ‘மை’ வழங்குகிறது. 

 MYPPE வெல்னெஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டின் தொழிலக நகரமான கோயம்புத்தூரில் அதன் பதிவு அலுவலகத்தையும், இந்நாட்டின் மென்பொருள் நகரமான பெங்களுருவில்  கிளை அலுவலகத்தையும் மற்றும் நாடெங்கிலும் 14 மாநிலங்களில் வினியோகஸ்தர்களையும் கொண்டிருக்கிறது.  மத்தியக்கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சேவை வழங்குகின்ற ஒரு வலுவான வினியோக வலையமைப்பையும் இந்நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கிறது.  கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஒப்பந்த அடிப்படையிலான உற்பத்தி தொழிலகங்களை ‘மை’ கொண்டிருக்கிறது.  MYPPE வெல்னெஸ் என்பது, மக்களுக்குப் புதிய மற்றும் பாதுகாப்பான இயல்புநிலையை உருவாக்குகிற, புத்தாக்க நடவடிக்கையால் முன்னெடுக்கப்படும் ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது. 

About Publisher

Check Also

Promed Hospital launches “Angioplasty with Warranty” scheme for coronary artery disease in India

Mr T S Jawahar, IAS, Additional Chief Secretary to Government of Tamil Nadu felicitates Dr …