Breaking News
Home / Uncategorized / நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சமுத்திரக்கனி & யோகிபாபு நடிக்கும் ‘வெள்ளையானை’

நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சமுத்திரக்கனி & யோகிபாபு நடிக்கும் ‘வெள்ளையானை’

இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி , யோகிபாபு . ஆத்மியா நடிப்பில் உருவாகியுள்ள படம் “வெள்ளையானை”.

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “மினி ஸ்டுடியோஸ் ” தயாரிப்பு நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரித்துள்ளார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் .

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .

இந்த உலகத்தில் உள்ள அனைத்து உரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது . உணவு விவசாயத்தையும் , விவசாயியையும் சார்ந்து இருக்கிறது . விவாசாயம் நீரை சார்ந்துள்ளது .விவசாய வாழ்வின் அன்பையும் , வியர்வையையும் ஏமாற்றத்தையும் , கண்ணீரையும் , கோபத்தையும் நையாண்டித்தனமாகவும் , நகைச்சுவையாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா.

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார் .

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது .

தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார்
கலை இயக்கம் – ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது

About Publisher

Check Also

Hanu-Man Tamil Movie Review 🌟🌟🌟

Prasanth Varma and Teja Sajja’s Hanu-Man is one film that has caught the attention of …