Breaking News
Home / Commercial / சினிமா நட்சத்திரங்கள் Vs டிவி நட்சத்திரங்கள்

சினிமா நட்சத்திரங்கள் Vs டிவி நட்சத்திரங்கள்

கலர்ஸ் தமிழ் அலைவரிசையின்பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த ரியாலிட்டி ஷோவான கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் (CSK), ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கிடையே நிகழும் மற்றுமொரு ஆர்வமூட்டும் போட்டியை தனது அடுத்த எபிசோடில் ரசிகர்களுக்கு படைக்கத் தயாராக இருக்கிறது.  கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் 2021 ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பாகிற எபிசோடில் நட்புறவோடு, போட்டித்திறனும் கலந்த மோதலில் திரைப்பட நட்சத்திரங்களும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மோதுகின்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சியை கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் வழங்குகிறது.  விஜே. அஞ்சனா ரங்கன் மற்றும் கமல் தண்டபாணி சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடு பார்வையாளர்களை உற்சாகத்தின் உச்சிக்கே எடுத்துச்செல்லும் என்பது நிச்சயம்.  தவறாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்ப்பதற்கு இரு காரணங்களை இதோ தருகிறோம்.

நட்சத்திரங்கள் ஜொலிக்கும் மோதல் களம்வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஒளிபரப்பாகும் சிஎஸ்கேவின் இந்த எபிசோடில் அழகான நடனங்களும், அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்வுகளின் சிறப்பான சங்கமம் இடம்பெறுகிறது.  உபாசனா ஆர்சி, ரிஷா ஜேக்கப், அஷ்மிதா சிங், ஷாஷ்வி பாலா, சாய் பிரியங்கா ரூத், ஹிமா பிந்து, சோபனா, தர்ஷினி கௌடா, கீர்த்தனா மற்றும் சங்கீதா என மக்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் இடம்பெறும் இந்த எபிசோடு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் ஒன்றுசேர்த்து தரும் என்பது நிச்சயம்.  கேளிக்கைக்கும், குதூகலத்திற்கும் குறைவே இருக்காது. 

துடிப்பான சவால்கள் மற்றும் பரபரப்பான துணுக்குச் செய்திகள்குதூகலம் நிறைந்த பல்வேறு கேம்கள் மற்றும் சவால்கள் என இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களை இருக்கையின் முனைக்கே கொண்டு வந்து நிறுத்தக்கூடிய நிகழ்வுகள் இந்த ஷோவில் இடம்பெறுகின்றன.  அதுமட்டுமின்றி, தங்களது வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான, ளேிக்கையான நிகழ்வுகளிலிருந்து ஆர்வமூட்டும் செய்திகளையும், துணுக்குகளையும் திரைப்பட நட்சத்திரங்களும், கலர்ஸ் தமிழ் நெடுந்தொடர்களின் நட்சத்திரங்களும் பகிர்ந்து கொள்வதனால் ரசிகர்கள் பெறும் மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகும். 

இந்த குதூகலமான அனுபவத்தை தவறவிடாமல் இருப்பதற்காக ஏப்ரல் 25 ஞாயிறு இரவு 7.00 மணிக்கு கலர்ஸ் சண்டே கொண்டாட்டம் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் அலைவரிசையை டியூன் செய்ய மறக்காதீர்கள்.  கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது.  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553). தங்களது வசதிப்படி எந்த நேரத்திலும் இந்த நிகழ்ச்சிகளை கண்டு மகிழ பார்வையாளர்கள் வூட் – ஐ டியூன் செய்யலாம்.   

About Publisher

Check Also

Enga Veetu Meenakshi new serial launch

Dance Vs Dance Season 2 featuring actor Kushboo and renowned choreographer Brinda Master, will be …