ஆலோசனை கூட்டத்திற்கு பின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
ஏப்ரல் 20-ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல். ஊரடங்கு சமயத்தில் தனியார் மற்றும் பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது. அனைத்து சுற்றுலாத்தளங்களுக்கும் தடை.
உணவகங்களுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு. காலை 6 முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் 3 மணி வரையிலும் பார்சலுக்கு அனுமதி. மாலை 6 மணி முதல் 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்படும்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு
ஊரடங்கு அறிவிப்பு.
- பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
- பிளஸ் 2 தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
- ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்!
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து.
- பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்
- பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு- செய்முறைத் தேர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும்
- கல்லூரி, பல்கலை., தேர்வுகள் இணையவழி மட்டுமே நடத்தப்பட வேண்டும்
