Home / Sports / ‘மை’ நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நியமனம்

‘மை’ நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி நியமனம்

பாதுகாப்பான வாழ்க்கை முறைக்கான உலகின் முதல் பிராண்டாக விளங்கும் ‘மை’ நிறுவனம்தனது நல்லெண்ண தூதுவராக 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வாள் வீச்சு வீராங்கனையான பவானி தேவியை நியமித்துள்ளதுபவானி தேவி வரும் ஜூலை மாதம் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் வாள் வீச்சு வீராங்கனையாவார்இந்த வாள் வீச்சு போட்டியில் அவர் பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்மேலும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்து மை நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான கவின்குமார் கந்தசாமி கூறுகையில், “பவானி தேவி போன்ற ஒரு துடிப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய இளம் விளையாட்டு வீராங்கனைக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு கூட்டாளராக நாங்கள் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்அவரது ஆளுமை எங்கள் பிராண்டின் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கை முறையை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒத்திருக்கிறதுமேலும் பவானி தேவி விளையாட்டு மீது வைத்துள்ள ஆர்வம்மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பு மற்றும் உடற்தகுதிக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவை எங்கள் பிராண்டுடன் தொடர்புடையதுஎனவே அவரை நல்லெண்ண தூதராக நியமித்திருப்பதன் மூலம் பாதுகாப்பின் அவசியத்தை மக்களிடம் வலியுறுத்த முடியும்பாதுகாப்பின் தேவை என்பது நமது வீடுகளில் இருந்தே துவங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம்எனவே ஒவ்வொரு தனிநபர்அமைப்புசமூகம் மற்றும் நாடு முழுவதிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்மேலும் மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்திறன் கொண்ட நமது வாழ்க்கை முறை நடைமுறைகளில் சாதகமான மாற்றத்தைக் காண்பதேஎங்களின் முக்கிய குறிக்கோளாகும் என்று தெரிவித்தார்”.

இது குறித்து வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி கூறுகையில், ‘மை’ நிறுவனத்துடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறதுநமது வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பதைநான் வலியுறுத்த விரும்புகிறேன்தொற்றுநோய் நமக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது.மேலும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் சிந்திக்க வைத்துள்ளதுஇந்நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக நான் இருப்பதன் மூலம்,எங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக பாதுகாப்பை உருவாக்குவதற்கும்அதற்கான ஒப்புதல் அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்ஒரு விளையாட்டு வீராங்கனையாகஉடற்பயிற்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை எங்கள் செயல்திறனுக்கான திறவுகோல் ஆகும். ‘மைமூலம்எனது முன்னுரிமை பட்டியலில் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் முதலிடத்தில் வைக்க விரும்புகிறேன்மை நிறுவனத்தின்தயாரிப்புகள் அனைத்தும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலானவை ஆகும்.ஆனால் அதே நேரத்தில் அவற்றின் புதுமையான பாதுகாப்பு அம்சங்கள் மூலம்மக்கள் விரும்பும் வாழ்க்கையை மிகவும் பாதுகாப்பாக அளிக்க உதவி செய்கிறதுவாழ்க்கையில்முன்னேற ஒரே வழி நமது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வேண்டும்.நாங்கள் விரும்பும் விளையாட்டைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பை எங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவதன் மூலம் எங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு விளையாட்டு போட்டிகளிலும் வெற்றிபெற முடியும் என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மை நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கப்பட்டதுஇந்நிறுவனம் இந்தியா முழுவதும் 14 மாநிலங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளதுமத்திய கிழக்குஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது வினியோக வலைதளத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கி உள்ளதுஇது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறதுதொற்று காலங்களில் நாம் பாதுகாப்பாக இருக்கும் வகையில் முகக்கவசம்யூவி ஒன் பாக்கெட் ஸ்டெர்லைசர் என்னும் கருவி, 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட யூவி ஸ்டெர்லைசர் பாக்ஸ்வைரஸ் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் கர்ச்சீப் போன்றவற்றை தயாரிக்கிறது

About Publisher

Check Also

46th State Shooting Championship Competition Shotgun was conducted at the Chennai Rifle Club’s Dr.Sivanthi Adityan Trap and Skeet Shooting Range

46th State Shooting Championship Competition Shotgun was conducted at the Chennai Rifle Club’s Dr.Sivanthi Adityan …